Tuesday, 8 September 2009

கூகுள் வழங்கும் தமிழில் செய்திகள்!

கூகுள் தொகுத்து வழங்கும் அண்மை செய்திகளை, அதுவும் தமிழில் நமது வலைத்தளத்தில் பெற எளிய வழி இது. முதலில் லேவுட் பகுதிக்கு சென்று add gadget -ஐ க்ளிக் செய்க. பார்க்க படம்.


அதில் வட்டமிட்டிருப்பதில் உள்ள + குறியை க்ளிக் செய்க. கீழே காணும் படம் தோன்றும்.
அதில் title என்பதில் செய்திகள் என்று கொடுக்கவும். Search Expression என்பதில் தோன்றும் எழுத்தை அழித்துவிட்டு உங்களுக்கு தேவையான செய்திகளுக்கான தலைப்பை- அதாவது அரசியல், சினிமா, விளையாட்டு, இலக்கியம் என்பது மாதிரி உங்களுக்கு தேவையான தலைப்பை தமிழிலேயே அங்கு டைப் செய்யுங்கள். ஒவ்வொன்றுக்கும் இடையில் கமா (,) இட மறக்காதீர்கள். அதிகபட்சம் மூன்று தலைப்பு இடுங்களேன்.



பின்பு சேவ் செய்திடுங்கள். உங்கள் வலைத்தளத்தில் இப்போது சுடச்சுட செய்திகள் தானியங்கியாக வந்துவிடும்.

அல்லது சம்பத் குமார் தமிழ் வெப் சொல்லியிருப்பது போலவும் செய்யலாம்.