Sunday 20 May, 2012

பழைய சோறு

பழைய சோறு : அந்த காலத்தில் கிராமங்களில் காலை உணவாக பழைய சோறு சாப்பிடுவது வழக்கம். அந்த வழக்கம் தற்ப்போது கிராமங்களில் கூட காண முடியவில்லை. இப்போது பழைய சோறு சாப்பிடுவது தகுதி குறைவாக பார்க்கப்படுகிறது. பிச்சைக்காரன் கூட வாங்க மாட்டேன் என்கிறான். பழைய . ஆனால் அதில் தான் வைட்டமீன் பி6 மற்றும் பி12 அதிகமாக உள்ளது. தவிரவும் சிறு குடலுக்கு நன்மை செய்யும் பாக்டிரியாக்கள் ட்ரில்லியன் கணக்கில் இருக்கிறதாம். இது நமது உணவுப்பாதையை ஆரோகியமாக வைத்திருக்கிறதாம்.  உணவுப்பாதை சீராக இருந்தால் அவுட்லெட்டும் சீராகிவிடும். காலையில் கழிவறையில் மல்லு கட்ட வேண்டாம். இதனுடன் இரண்டு சிறிய வெங்காயம் சேர்த்து உண்டால் அபரிமிதமான நோய் எதிர்ப்பு சக்தி கிடைகிறதாம். காய்சல் போன்ற நோய்களிடம் இருந்து காக்கிறது. பன்றி காய்ச்சல் உட்பட. காலை உணவாக பழைய சாதத்தை உண்டால் உடல் லேசாகவும் சுறு சுறுப்பாகவும் இருக்கும். இரவிலே தண்ணீர் ஊற்றி வைப்பதால் லட்சக்கணக்கான நல்ல பாக்டிரியாக்கள் உருவாகிறது. மறு நாள் இதை குடிப்பதால் உடல் சூட்டை தணிப்பதோடு குடல் புண், வயிற்று வலி போன்றவற்றை குணப்படுதும். அதுமில்லாமல் இதில் இருக்கும் நார் சத்து மலச்சிக்கல் இல்லமல் காலையில் ஃபிரியா போகலாம். இதனை தொடர்ந்து சாப்பிட்டால் ரத்த அழுத்தம் கட்டுக்குள் வந்து உடல் எடையும் குறைந்துவிடுவதாக அமெரிக்காவில் வசிக்கும் இந்திய விஞ்ஞானி பிரதீப் கூறுகிறார். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் உடலுக்கு அதிகமான சக்தியை தந்து உடலை சோர்வின்றி வைக்க உதவுகிறது. அலர்ஜி, அரிப்பு போன்றவை கூட சரியாகிவிடுகிறது. அல்சர் உள்ளவர்கள் இதை சாப்பிட்டு வந்தால் மிக விரைவில் குணமாகிவிடும். எல்லாவற்றுக்கும் மேலாக நோய் எதிர்ப்பு சக்தி கிடைப்பதால் எந்த நோயும் வராமல் உடல் ஆரோக்கியமாகவும் இளமையாகவும் இருக்கும். அதனாலதான் நம்ம ஆளுங்க ஒரு சட்டி பழைய சாதம் சாப்பிட்டு விட்டு மாலை வரை வயலில் வேலை செய்யமுடிந்திருகிறது போலும். 
காலையில் சாண்ட்விச், பீட்ஸா, பர்கர் என கழித்து திரியும் தமிழ் மக்களே... இன்றிலிருந்து பழைய சோறு சாப்பிட்டு நோயிலிருந்து பாதுகாப்பு பெறுவோம். 

அப்புறம் பழைய சாதம் செய்ய தெரியுமா? 
(என்ன கொடுமை சார் இது எதுகொல்லாம் கிளாஸ் எடுக்க வேண்டியாத இருக்கு) பொங்குன சோத்துல தண்ணிய ஊத்திட்டு அடுத்த நாள் கலைல திறந்து பாருங்க கம கம என பழைய சோறு தயார். இதற்கு கைகுத்தல் அரிசி சிறந்தது. நம்ம வீட்டல் போய் கைகுத்தல் அரிசியில் சோறு பொங்க சொன்னால் நமக்குதான் குத்து கிடைக்கும் என அஞ்சுபவர்கள் ஒரு ரூபாய் அரிசி கூட உபயோக்கலாம். சூடான சாததில் தண்ணீர் ஊற்ற கூடாது. ஆறிய பின்பு மண்டட்டியில் போட்டு தண்ணீர் ஊற்றி மறு நாள் காலையில் சிறிது மோர் கலந்து சின்ன வெங்காயத்துடன் சாப்பிட்டால் ஜில்லென்று இருக்கும். மதியம் வரை பசிக்காதாம். 
---------மூலம்:ஷாகுல்

Thursday 8 March, 2012

தலைக்கு சாயம் (டை) அடிப்பவரா நீங்கள்?

பலர் தவிர்க்கமுடியாத ஒரு விஷயம் ஹேர் டை. ஆம் எனக்கு 17 வயதில் இருந்து தேவை பட்டது. பலருக்கு 30 வயதில் ஆரம்பித்து 45 வயதிற்குள் கண்டிப்பாக நரை என்ற விஷயம் தவிர்க்கமுடியாமல் போகிறது. இதில் என்னை பொறுத்த வரை 75% சதவிகித ஆண் பெண் ஹேர் டை உபயோகத்திற்க்கு ஆளாகின்றனர். இதில் சில பேர் தலைக்கு மட்டும், சிலர் மீசைக்கு, சிலர் தாடிக்கு, சிலர் நெஞ்சு முடிகளுக்கு என்று ஹேர் டை உபயோகம் நம் உடம்பில் ஒரு அங்கமாகிறது. சில பெண்கள் நரை அவ்வளவு இல்லாதவர்கள் மருதாணி அரைத்து போட்டுகொண்டு இருந்ததும் இப்பொழுது அதுவும் ஹேர்டை கம்பெனிகள் மருதாணி, நெல்லிக்காய், என்று எல்லாம் இயற்கை வடிவில் என நமக்கு கெமிக்கல் கலவைதான் கொடுக்கின்றனர்.

இதில் இப்ப நம்மவர்கள் கொஞ்சம் ஸ்மார்ட்டாகி சார் எனக்கு டை பற்றி இப்ப நல்லா தெரியும் அதனால் " நான் அம்மோனியா" தான் போடுவேன் என்று பெருமையாக கூறுவார்கள். ஆனால் நிறைய பேருக்கு அம்மோனியா நான் அம்மோனியா வித்தியாசம் தெரிவதில்லை. தெரிந்தாலும் 50% சதவிகிதம் தான் நீங்கள் ரிஸ்க்கை தவிர்க்கலாம். முதலில் அம்மோனியா டைதான் முன்னைய காலத்தில் பிரபலம். இதில் உள்ள ஒரே வித்தியாசம் இந்த அம்மோனியா டை அடித்தால் கலர் போகவே போகாது. ஆனால் புது முடி வரும்போது கீழே வெள்ளைமுடி தெரியும். அதுபோக அம்மோனிய டை மிக மோசமானது. தொடர்ந்து 10 வருடங்கள் உபயோகித்தால் ஆஸ்மாவும் 15 வருடத்தில் கேன்சர் வர வாய்ப்பிருக்கிறது. அதனால் நான் அம்மோனியா உபயோகித்தால் மட்டும் நல்லது என நினைக்கவேண்டாம். நான் அம்மோனியாவில் தாக்கம் கொஞ்சம் தான் குறைவு மற்றபடி நான் அம்மோனியா டையும் இதே பிரச்சினைகள் தான். மருதாணி நீங்கள் அரைத்து போட்டால் தான் சேஃப், ஆனால் கடையில் விற்கும் ஹென்னா, நெல்லிகாய் ஹேர் டை இதெல்லாம் நமக்கு நாமே நாள் குறிக்கும் ஸ்லோ பாய்ஸன். ஆம் இந்த ஹேர் டையில் முக்கிய நச்சு பொருள் "ஃபீனலியின்டைலமின்" எனும் (Para-Phenylenediamine - PPD ) பொருள் மிக மோசமான ஒரு விஷயம். ஹென்னா எனப்படும் மருதாணி கொடுக்கும் நிறம் சிவப்பு மற்றும் கருஞ்சிவப்பு தான். அதனால் ஹென்னா போட்டு கருப்பு நிறம் ஆனால் கண்டிப்பாக அது பிபிடி உள்ள ஹேர் டைதான். 100% இயற்கை ஹேர் டை என்று ஒரு ஹேர் டை உலகத்தில் இல்லை. இதில் இந்தியர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் ஏன் தெரியுமா - இந்தியர்கள் தான் " நேச்சுரல் பிளாக்" ஃபுல் பிளாக் வண்ணத்தை உபயோகிக்கிறோம். இதில் அதிகமாக கெமிக்கல் கலக்கபடுவதால் ரிஸ்க் அதிகம். நார்மலாக ஒரு சராசரி மனிதன் 10 - 12 முறை டை அடிக்கிறான். இது மிகவும் ஆபாத்தான விஷயம். மீசைக்கு அடிப்பது, நெஞ்சு முடிக்கு அடிப்பது மிக மிக ஆபத்தானது. சிலருக்கு மிக ஸ்லோவாக மூச்சு விட சிரமம் ஆரம்பித்து பிறகு அது ரெகுலர் பிரச்சினையாகிவிடும்.

நிறைய நாடுகளில் இந்த பிபிடியை தடுக்க ஹெல்த் மினிஸ்ட்ரி போராடினாலும் இந்த சலூன்கள் இதை பெருமளவில் மறைத்து டை போடுகின்றனர். டை போடுவதால் முடி கொட்டும் மற்றும் அதிக க்ருப்பு ஷேடுகளை தவிருங்கள். ஒரு பூத கண்ணாடியை வைத்து என்ன கெமிக்கல் உள்ளது என பாருங்கள். ஏன் என்றால் அவ்வளவு சிறிதாக தான் கெமிக்கல் டீட்டெயில் பற்றி போட்டிருப்பார்கள் அந்த கெமிக்கல் டீட்டெயிலை பற்றி கூகுள் செய்யுங்கள் வாழ்க்கையில் டை அடிக்கும் பழக்கத்தை விட்டுவிடுவீர்கள். சரி டை போடுவது நம் வெள்ளை முடியை மறைக்கத்தான் சரி என்ன செய்வது என டை போடும் மனிதர்களை வேண்டுமானால் பார்த்து பரிதாப படலாம் ஆனால் நல்லா கருப்பாய் இருக்கும் முடியை பான் பராக், காரக்குழம்பு தலையாக்கும் இளைஞன் இளைஞிகளை நினைத்தால் தான் மிக பரிதாபம். ஏன் என்றால் அவர்கள் ஒரு தடவை பயன்படுத்தினால் வாழ்க்கை முழுவது அந்த கலரை போட வேண்டும் இல்லையெனில் அதை விட்டால் நான் கடவுள் ஆர்யா போலத்தான் ஆகவேண்டும். முழுவதும் விட மொட்டை அடித்து புது முடி வளர்ப்பதை தவிர வேறு ஒன்றும் பண்ணமுடியாது. ஆண்கள் பரவாயில்லை பெண்கள் தான் பாவம் மொட்டையும் அடிக்கமுடியாது, கலர் பண்னும் பழக்கத்தையும் விட முடியாது. நிறைய பேர் கல்யானத்திற்க்கு முன் இந்த தவறை செய்வதால் கல்யானம் ஆன பிறகு கணவர்களின் முக்கிய முகம் சுழிப்பு இந்த விஷயம் தான் அதுவும் கூட்டு குடும்பத்தில் சான்ஸே இல்லை. முடிந்த அளவு டை உபயோகத்தை கட்டுபடுத்துங்கள். இரண்டாவது வெளியே செல்லும் நாட்களில் மட்டும் பழைய டெக்னிக் "ஐடெக்ஸ்" கண்மை போட்டு போங்கள் சிலர் வெள்ளை முடியுடன் இருக்க பழகி கொள்ளுங்கள் இல்லையெனில் அட்லிஸ்ட் மாதம் ஒரு முறை என்பதை தவிர்த்து இரண்டு மாதத்திற்கு ஒரு முறை என்று மாற்றினால் பிரச்சினையை தள்ளிப்போடலாம். கர்ப்பிணி பெண்கள் பத்து மாதம் தயவு செய்து போடவே வேண்டாம். இரண்டு கலவை மிக்ஸ் பன்னும் ஹேர் டை 100% பயன்படுத்துவதை தவிருங்கள் இதில் கண்டிப்பாக பிபிடி இருக்கும்
நன்றி- http://www.facebook.com/nagravi1

Thursday 16 February, 2012

கவிதைப்போட்டி+ கவிதை நூல் வெளியீடு!



சகோதரி வான்மதி அவர்களை ஆசிரியராகக் கொண்டு பாவையர் மலர் எனும் மாதஇதழ் புதியன விரும்பு எனும் முழக்கத்தோடு வெளிவருகிறது. இதில் சிறுகதை, ஆன்மிகம், நேர்காணல், கவிதைகள்,துணுக்குச் செய்திகள், புத்தக விமர்சனம், வா.மு.கோமு, திலகபாமா ஆகியோர் எழுதும் தொடர்கள், பாவை பதில்கள், இன்னும் இன்னும் சுவராசியமான தகவல்களுடன் வெளிவருகிறது. மாதந்தோறும் கவிதை பரிசுப்போட்டியும் நடத்துகிறார்கள். மார்ச் மாதத்திற்கான தலைப்பு 'மாதவராய் பிறப்பதற்கே...!' இத்தலைப்பில் 16 வரிகளுக்குள் கவிதை எழுதி 25.02.2012க்குள் அனுப்பிவையுங்கள்.
இதழ் முகவரி-
பாவையர் மலர்,
55, வ.உ.சி.நகர், மார்க்கெட் தெரு,
தண்டையார் பேட்டை, சென்னை- 81
தொலைபேசி எண்- 044/2596 4747

•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
மழலைச் சுவடுகள் (தொகுதி-4)
குழந்தைப் பாடல் புதிய தொகுப்பு வெளியிடவிருக்கிறார் கவிஞர் இரா. பன்னீர் செல்வம். அறிவியல் மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் குறித்த சிறுவர்களுக்கு விழிப்புணர்வையும் ஆர்வத்தையும் தூண்டும் வகையில் எளிய சந்த கவிதைகளை (12- 16 அடிகளில்) பாடலுக்கேற்ற படமுடன், 30.06.2012க்குள் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பலாம். விருப்பமுள்ளவர்கள் பங்குத்தொகையாக 100.00 அனுப்பலாம். (கட்டாயமில்லையாம்.)
முகவரி- கவிஞர் பன்னீர் செல்வம்,
மலர் பதிப்பகம்,
5, ஆண்டியப்பன் தெரு, முதல் சந்து,
பழைய வண்ணாரப்பேட்டை,
சென்னை- 600 021
கைபேசி- 9884711802

Tuesday 3 January, 2012

ஒரு முக்கிய விடயம்

அன்புமிகு நண்பர்களுக்கு வணக்கம். ஒரு முக்கிய விடயத்தை உங்களுக்குத் தெரியப்படுத்தவே இந்த இடுகை.
பதிவர்களுக்காக பதிவர்களின் படைப்புகளை தாங்கி வெளிவந்த பதிவர் தென்றல் இதழ் போதிய விளம்பரம் கிடைக்காத காரணத்தால் நிறுத்தப்பட்டுவிட்டது என்பதை இதன்மூலம் தெரிவித்துக் கொள்கிறேன். ஆர்வத்துடன் சந்தா அனுப்பிய அனைவருக்கும் நன்றி. சந்தா தொகை விரைவில் திருப்பி அனுப்பி வைக்கப்படும். மீண்டும் சந்திப்போம். நன்றி.
அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துகள். ரொம்ப தாமதமாக சொல்வதற்கு மன்னிக்கவும்.

Monday 24 October, 2011

அக்டோபர் மாத பதிவர் தென்றல் + தீபாவளி வாழ்த்துகள்!


கோவி.கண்ணன் http://govikannan.blogspot.com
கணேஷ் minnalvarigal.blogspot.com
மதுரை சொக்கன் http://shravanan.blogspot.com
ரியாஸ் http://riyasdreams.blogspot.com
வேலன்ஜி http://velang.blogspot.com
குரு. பழ.மாதேசு http://kavithaimathesu.blogspot.com
தங்கவேல்
http://thangavelmanickadevar.blogspot.com
பிளாக்கர் நண்பன் http://bloggernanban.blogspot.com
கணேசமூர்த்தி http://ganeshmoorthyj.blogspot.com/
கோகுல் http://gokulmanathil.blogspot.com
நெல்லைகவி எஸ்.ஏ. சரவணகுமார் http://nellaikavisasaravanakumar.blogspot.com
வத்திராயிருப்பு கவுதமன் http://watrapgauthaman.blogspot.com
சிவகாசிக்காரன் http://sivakaasikaaran.blogspot.com
ருக்மணி பாட்டி http://chuttikadhai.blogspot.com
ராஜபாட்டை ராஜா http://rajamelaiyur.blogspot.com
ஆர்.எஸ்.நாதன் rs-nathan.blogspot.com
யாழினி http://yazhinidhu.blogspot.com




www.latestgreetingcards.com

Monday 10 October, 2011

துயில்' நாவல் குறித்த கலந்துரையாடல்

எஸ். ராமகிருஷ்ணனின் "துயில்' நாவல் குறித்த கலந்துரையாடலுக்கான (8.10.2011 மாலை நேர) நிகழ்ச்சி ஏற்பாடுகளை டிஸ்கவரி புக் பேலஸின் உரிமையாளர் திரு.வேடியப்பன் செய்திருந்தார். முனைவர் இராம. குருநாதன் அவர்கள் தலைமையில் மற்றும் கூத்துப்பட்டறைச் சேர்ந்த தம்பிச்சோழன் சிறப்புரையாற்றுகிறார் என்ற தகவல் கிடைத்தது.

கொஞ்சம் தாமதமாகத்தான் சென்றேன். நான் சென்றபோது தம்பிச்சோழன் நாவல் பற்றி பேசிக்கொண்டிருந்தார். முடியும் தருவாயில் சென்றேன். கூட்டம் அதிகமாகயிருந்ததால் வசதியாக நிற்பதற்கு இடம்தேடுவதற்குள் அவர் பேசிமுடித்திருந்தார். அடுத்து எஸ்.ரா பேசினார். அவர் பேசியதன் முழு விவரத்திற்கு இங்கே சொடுக்கவும். http://www.tv.udanz.com

ரசித்த துளிகளில் என் ஞாபகத்தில் இருந்தவை மட்டும் இங்கே....

துயில் நாவலில் வரும் தெக்கூடு எனும் ஊர் உண்மையில் இல்லவே இல்லையாம். முழுக்க முழுக்க எஸ்.ரா.வின் கற்பனையாம். இதை அவர் குறிப்பிடும்போது அனைவரும் ஆச்சரியமாய் ரசித்தனர்.

துயில்- என்றால் தூக்கம். மனிதனுக்கு தூக்கம் ரொம்ப முக்கியம். அது சரியில்லாததால்தான் பெரும்பாலான குறைபாடுகள் வருகிறது (அதை குறைபாடுகள் என்றுதான் சொல்ல வேண்டும். நோய் என்று கூறக்கூடாது) என்றார். கிராமத்து பிள்ளைகள் எல்லாம் நன்றாக ஓடியாடி விளையாண்டு நன்றாக தூங்கும். ஆனால் நகரத்துப் பிள்ளைகளை பெற்றோர்கள் தூங்கு தூங்கு என்று சொல்- அவர்களே டயர்டாகி தூங்கிவிடுவார்கள். பெற்றோர்கள் தூங்கிவிட்ட பிறகு இதற்கு முழித்திருந்து என்ன செய்யப்போகிறோம் என்று நினைத்து பின்பு குழந்தைகளும் தூங்கிவிடும் என்றார்.

ரு மருத்துவமனைக்கு சென்றிருந்தாராம். அந்த மருத்துவ மனையில் வயதான ஒருவருக்கு மருத்துவர் நன்கு விசாரித்துவிட்டு குறிப்பேட்டில் எழுதிவிட்டு சென்றாராம். அவர் சென்றபிறகு எஸ்.ராவிடம் அந்த பெரியவர், "என் மகன்தான் டாக்டர். நல்லா கவனிச்சுக்கிறான். ஆனால் என்னை கையைப் பிடித்து விசாரிக்க மாட்டேங்கிறான்'' என்றவாரு எஸ்.ராவின் கையை பிடித்துக் கொண்டாராம். வயதானவர்கள் வசதி வாய்ப்புகளைவிட தங்களை வாஞ்சையுடன் கவனிக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அவர்கள் கையை கொஞ்ச நேரம் பிடித்திருந்தாலே அவர்கள் ரொம்பவும் மகிழ்வார்கள் என்றார்.
விஞ்ஞானம் வளர்ந்திருக்கும் இந்நாளில் உலகமே சுருங்கிவிட்டது. ஆனாலும் மருத்துவத்துறையில் மட்டும் தேக்கமடைந்திருப்பதாக வருத்தப்பட்டார். சென்னையில் ஒரு மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்ளும் ஒருவர் வேலை விசயமாக மதுரைக்கு செல்ல நேர்ந்திருக்கும்போது அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டால், அங்கிருக்கும் மருத்தவமனையிலும் (சென்னையில் எடுத்ததுபோலவே) அனைத்து டெஸ்ட்டுகளும் எடுக்க சொல்வார்கள். நெட்வொர்க் மூலம் அனைத்து மருத்துவமனைகளும் ஒருங்கிணைக்கப் பட்டிருந்தால் இந்த செலவுகள் மிச்சம்தானே என்றார். அவர்களின் சம்பாத்தியம் போய்விடும் என்பதால் இதை யாரும் செய்வதில்லை என்று வருத்தப்பட்டார்.

முன்பெல்லாம் மருத்துவரின் வீடும் மருத்துவம் செய்யுமிடமும் ஒன்றாக இருந்தது. எப்பொழுது வேண்டுமானாலும் கதவைத் தட்டி சிகிச்சை செய்துகொள்ள முடியும். அந்த காலத்தில் மருத்துவம் என்பது சேவையாக இருந்தது. ஆனால் இப்பொழுது அதை தொழிலாக்கி விட்டதால் மருத்துவமனை என்று தனியே கட்டிவிட்டார்கள். எங்கள் குடும்பமே மருத்துவ குடும்பம்தான். என் சகோதரன் வேட்டி சட்டையில்தான் எப்பொழுதும் இருப்பார். அவர் டாக்டர்தானா என்றுகூட பலரும் சந்தேகிப்பார்கள். மருந்து சீட்டையும் தமிழில்தான் எழுதுவார் என்று கூறினார். ஆச்சரியமும் அதிர்ச்சியும்தான் வந்திருந்தவர்களின் முகத்தில் தெரிந்தது.

சித்தமருத்துவர்கள்கூட தங்களின் தொழில் ரகசியங்களை வெளியில் சொல்வதில்லை. அவர்களின் குழந்தைகளுக்குத்தான் சொல்லிக் கொடுப்பார்கள். அந்தக் குழந்தைகளுக்கு அத்துறையில் ஈடுபாடு இல்லையென்றால் அந்த ரகசியங்கள் அவரோடு அழிந்து போய்விடும். இப்படித்தான் பல ரகசியங்கள் அழிந்துபோய்விட்டதாக வருத்தம் தெரிவித்தார்.

துயில் நாவலில் சில இடங்களில் எழுத்துப்பிழைகள் இருப்பதாக சொன்னபோது-
இருக்கலாம். ஏனெனில் எழுதிய நானே படித்தால் எழுத்துப்பிழைகள் தெரியாது. வெளிநாடுகளில் பிழைதிருத்த என அனைத்து துறைபற்றியும் தெரிந்தவர்கள் இருப்பார்கள். கண்டெட்-டை (உள்ளடக்கம்) திருத்த ஒருவர். பாராகிராப் (பத்தியமைப்பு) பார்ப்பதற்கு ஒருவர் என்றிருப்பார்கள். பின்பு பதிப்பகத்தார் படித்து, மாதிரி காப்பி ரெடி செய்து எழுத்தாளருக்கு அனுப்புவார்கள். எழுத்தாளர் பார்த்துவிட்டு சரி என்றதும்தான் அச்சுக்கு அனுப்புவார்கள் என்றார். ஆனால் தமிழ்நாட்டில் அனைத்து துறை அறிந்த பிழைதிருத்துநர்கள் இல்லை. அதற்கான தேவை இருக்கிறது என்றார்.

Friday 30 September, 2011

பதிவர் தென்றலுக்கு தமிழகமெங்கும் அமைப்பாளர்கள் நியமனம்...

திவர்களுக்காக- பதிவர்களின் படைப்புகளை மட்டுமே தாங்கி வரும் இதழான பதிவர் தென்றல் இதழைப் பற்றி நீங்கள் அறிவீர்கள். பதிவர் தென்றல் எங்கு கிடைக்கும் என்று ஆர்வமுடன் விசாரிக்கும் உங்களின் அன்புக்கு என்ன செய்வது என்று யோசித்தேன்.

தமிழகமெங்கும் இந்த இதழை கொண்டு சேர்க்கும் வகையில் பதிவர் தென்றலுக்கு மாவட்டத்திற்கு ஒரு அமைப்பாளர் என நியமனம் செய்யலாம் என்று தோன்றியது. அந்த அமைப்பாளருக்கு மாதம்தோறும் இதழ் அனுப்பி வைக்கப்படும். சந்தாவும் அவரிடமே செலுத்தலாம். அவர்களிடமிருந்து இதழை நீங்கள் பெற்றுக் கொள்ளலாம்.

இதழில் பதிவர்களின் படைப்புகளையே வெளியிடுவதுபோல் இதழுக்கான அமைப்பாளர்களையும் பதிவர்களே இருந்தால் நன்றாக இருக்குமென்பதும் என் யோசனை. பதிவர்களாக தமிழகமெங்கும் இருக்கும் நண்பர்கள் இந்த யோசனை பிடித்திருந்தால், உங்களுக்கு ஆர்வம் இருந்தால் எனக்கு தெரிவியுங்கள். இதழில் அமைப்பாளர்களின் பெயர்கள் அவர்களின் வலைத்தளத்தின் முகவரியோடு வெளியிடப்படும்.

டுத்த இதழ்- தீபாவளிக்கு முன்னதாக உங்களுக்கு கிடைக்கும் விதத்தில் தயாரிப்பில் இருக்கிறது. தீபாவளி பற்றி உங்களின் இடுகைகள் (சமையல், வெடி, பாதுகாப்பு, அனுபவம்...) வெளியாகியிருந்தால் அதன் லிங்கை எனக்கு தெரியப்படுத்தவும். பயன்படுத்திக் கொள்கிறேன்.

ஆகஸ்ட் மாத பதிவர் தென்றல் இதழில் இடம்பெற்ற பதிவர்கள்...

செப்டம்பர் மாத பதிவர் தென்றல் இதழில் இடம்பெற்ற பதிவர்கள்...