Sunday 20 May, 2012

பழைய சோறு

பழைய சோறு : அந்த காலத்தில் கிராமங்களில் காலை உணவாக பழைய சோறு சாப்பிடுவது வழக்கம். அந்த வழக்கம் தற்ப்போது கிராமங்களில் கூட காண முடியவில்லை. இப்போது பழைய சோறு சாப்பிடுவது தகுதி குறைவாக பார்க்கப்படுகிறது. பிச்சைக்காரன் கூட வாங்க மாட்டேன் என்கிறான். பழைய . ஆனால் அதில் தான் வைட்டமீன் பி6 மற்றும் பி12 அதிகமாக உள்ளது. தவிரவும் சிறு குடலுக்கு நன்மை செய்யும் பாக்டிரியாக்கள் ட்ரில்லியன் கணக்கில் இருக்கிறதாம். இது நமது உணவுப்பாதையை ஆரோகியமாக வைத்திருக்கிறதாம்.  உணவுப்பாதை சீராக இருந்தால் அவுட்லெட்டும் சீராகிவிடும். காலையில் கழிவறையில் மல்லு கட்ட வேண்டாம். இதனுடன் இரண்டு சிறிய வெங்காயம் சேர்த்து உண்டால் அபரிமிதமான நோய் எதிர்ப்பு சக்தி கிடைகிறதாம். காய்சல் போன்ற நோய்களிடம் இருந்து காக்கிறது. பன்றி காய்ச்சல் உட்பட. காலை உணவாக பழைய சாதத்தை உண்டால் உடல் லேசாகவும் சுறு சுறுப்பாகவும் இருக்கும். இரவிலே தண்ணீர் ஊற்றி வைப்பதால் லட்சக்கணக்கான நல்ல பாக்டிரியாக்கள் உருவாகிறது. மறு நாள் இதை குடிப்பதால் உடல் சூட்டை தணிப்பதோடு குடல் புண், வயிற்று வலி போன்றவற்றை குணப்படுதும். அதுமில்லாமல் இதில் இருக்கும் நார் சத்து மலச்சிக்கல் இல்லமல் காலையில் ஃபிரியா போகலாம். இதனை தொடர்ந்து சாப்பிட்டால் ரத்த அழுத்தம் கட்டுக்குள் வந்து உடல் எடையும் குறைந்துவிடுவதாக அமெரிக்காவில் வசிக்கும் இந்திய விஞ்ஞானி பிரதீப் கூறுகிறார். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் உடலுக்கு அதிகமான சக்தியை தந்து உடலை சோர்வின்றி வைக்க உதவுகிறது. அலர்ஜி, அரிப்பு போன்றவை கூட சரியாகிவிடுகிறது. அல்சர் உள்ளவர்கள் இதை சாப்பிட்டு வந்தால் மிக விரைவில் குணமாகிவிடும். எல்லாவற்றுக்கும் மேலாக நோய் எதிர்ப்பு சக்தி கிடைப்பதால் எந்த நோயும் வராமல் உடல் ஆரோக்கியமாகவும் இளமையாகவும் இருக்கும். அதனாலதான் நம்ம ஆளுங்க ஒரு சட்டி பழைய சாதம் சாப்பிட்டு விட்டு மாலை வரை வயலில் வேலை செய்யமுடிந்திருகிறது போலும். 
காலையில் சாண்ட்விச், பீட்ஸா, பர்கர் என கழித்து திரியும் தமிழ் மக்களே... இன்றிலிருந்து பழைய சோறு சாப்பிட்டு நோயிலிருந்து பாதுகாப்பு பெறுவோம். 

அப்புறம் பழைய சாதம் செய்ய தெரியுமா? 
(என்ன கொடுமை சார் இது எதுகொல்லாம் கிளாஸ் எடுக்க வேண்டியாத இருக்கு) பொங்குன சோத்துல தண்ணிய ஊத்திட்டு அடுத்த நாள் கலைல திறந்து பாருங்க கம கம என பழைய சோறு தயார். இதற்கு கைகுத்தல் அரிசி சிறந்தது. நம்ம வீட்டல் போய் கைகுத்தல் அரிசியில் சோறு பொங்க சொன்னால் நமக்குதான் குத்து கிடைக்கும் என அஞ்சுபவர்கள் ஒரு ரூபாய் அரிசி கூட உபயோக்கலாம். சூடான சாததில் தண்ணீர் ஊற்ற கூடாது. ஆறிய பின்பு மண்டட்டியில் போட்டு தண்ணீர் ஊற்றி மறு நாள் காலையில் சிறிது மோர் கலந்து சின்ன வெங்காயத்துடன் சாப்பிட்டால் ஜில்லென்று இருக்கும். மதியம் வரை பசிக்காதாம். 
---------மூலம்:ஷாகுல்

6 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

ஆஹா ! பழைய சோற்றுக்கு நெற்றியில் சிகப்பு மிளகாயால் நாமம் போட்டு, சின்ன வெங்காயங்களால் கண்களைப் போட்டூ, பச்சைமிளகாயால் வாயையும் திறந்து காட்டியுள்ள தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

படத்தைப் பார்த்தாலே ஜில்லுனு பழைய சாதம் சாப்பிட்டது போல மகிழ்ச்சியளிக்கிறது.

அன்புடன் vgk

குறையொன்றுமில்லை. said...

சார் இப்பவும் பல வீடுகளில் பழைய சோறு சாப்பிடராங்களே. முத நா மீந்ததையெல்லாம் ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடராங்களே

'பரிவை' சே.குமார் said...

கஞ்சி...
எனக்குப் பிடித்தது இதுதான். மூன்று நேரமும் கொடுத்ததாலும் சாப்பிடுவேன்.
இப்ப இங்கு அதற்கு வாய்ப்பேயில்லை.
அருமையான பகிர்வு.

தமிழ்த்தோட்டம் said...

அருமையான பகிர்வு பகிர்வுக்கு நன்றி

தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல பகிர்வு... ரசித்துப் படித்தேன்...

வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு முதல் வருகை…
Follower ஆகி விட்டேன்… இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/09/blog-post_18.html) சென்று பார்க்கவும்...

நேரம் கிடைச்சா நம்ம தளம் வாங்க... நன்றி…

Unknown said...

பழைய சோறு எனக்கு மிகவும் பிடிக்கும்....அனைவரும் விரும்பி உண்ணுங்கள்..உண்டு பயன் பெறுங்கள்

Post a Comment

உங்கள் கருத்துக்கள் எனக்கு ஊக்கமளிக்கும். மேம்படுத்தும். தயவு செய்து முகம் சுளிக்கத்தக்க பின்னூட்டங்களை தவிருங்கள்.