Tuesday 14 September, 2010

இப்படி யாருக்கும் நடந்ததுண்டா?


உங்களில் யாருக்கும் இப்படி நடந்ததுண்டா என்று தெரியவில்லை. நடந்திருந்தாலும் நடந்திருக்கலாம்.
என்ன நடந்தது? என்று அறிய ஆவலாக இருப்பீர்கள்.
தமிழிஸ் இன்டலியாக மாறினாலும் மாறிற்று புதிய இடுகையை அதில் வெளியிடுவதற்குள் போதும்போதுமென்று ஆகிவிடுகிறது.
இடுகையை புதுப்பிக்க உள் நுழைந்து எல்லாம் செய்தபிறகு, உங்கள் தளத்திலிருந்து புது இடுகை வெளியிட முப்பது நிமிடங்கள் காத்திருக்கவும் என்கிறது.
ஒரு இடுகைக்கும் அடுத்த இடுகைக்கும் இடைவெளி முப்பது நிமிடம் என்பது இன்டலியின் நிபந்தனை. அது எனக்கும் புரியும். ஆனால் எப்போதாவது இடுகையிடும் எனக்கும் அந்த மாதிரி முதல் இடுகையிடும்போதே வருகிறதே என்று புரியாமல் தவித்தேன்.
பிறகு, என் வலைத்தளத்தில் உள்ள இன்டலியின் பட்டையில் உள்ள like? என்பதை க்ளிக் செய்தேன். உடனே இன்டலியின் பக்கம் விரிந்தது. அதில் உள் நுழைந்ததும், அதுவாகவே அனைத்து தகவல்களையும் பூர்த்தி செய்துகொண்டது. பிரிவுகள் என்ன என்பதை பூர்த்தி செய்துவிட்டு, இணைக்க என்பதை க்ளிக் செய்து எளிதாக இணைத்துவிட்டேன்.

Sunday 11 July, 2010

2010-ல் வலையுலகிற்கு வந்தவரா நீங்கள்?

2010-ல் வலையுலகிற்கு வந்தவரா நீங்கள்?
அப்படியானால் உங்களுக்குகாகத்தான் இந்த இடுகை!
புதிது புதிதாக வலைத்தளத்திற்கு வந்து கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் கண்டுபிடிப்பதற்கு சற்று சிரமமாகத்தான் இருக்கிறது. அவர்களின் வலைத்தளத்தை அனைவரும் கண்டுகொள்ள என்ன வழி என்று யோசித்தேன். அவர்களின் அனைவரின் வலைத்தள முகவரியும் ஒரே இடத்தில் கிடைத்தால், அது என்னைப்போன்ற நினைப்பவர்களுக்கு உதவியாக இருக்குமென்பதால் இந்த முடிவுக்கு வந்தேன்... புதிதாக வலைத்தளத்திற்கு வருகை தந்தவர்கள் தங்கள் வலைத்தள முகவரியை இங்கு பதிவு செய்யுங்கள்...!
அதைப் பார்வையிடும் மற்றவர்கள் உங்கள் வலைத்தளத்திற்கு வருகை தருவார்கள்.
என்ன? தயாராகிவிட்டீர்களா?
இந்த யோசனை உங்களுக்கு பிடித்திருந்தால் தமிழ்மணம், தமிழிஷ் இரண்டிலும் வாக்களித்து பலரையும் சென்றடைய செய்யுங்கள். பலரையும் உங்கள் பக்கம் வரவழையுங்கள்!
உங்களின் வலைத்தளம் அனைவரையும் சென்றடைய வாழ்த்துகள்!

Wednesday 7 July, 2010

தமிழ்மணத்தின் கருவிப்பட்டையை பெற எளிய வழி!

புதிதாக வலைப்பக்கம் தொடங்குபவர்களுக்கு தங்கள் வலைத்தளத்தினை பிரபலப்படுத்த பல்வேறு திரட்டிகளை பயன்படுத்துவார்கள். பழமையான, பலரையும் பிரபலப்படுத்திய தமிழ்மணம் பற்றியும் பலர் அறிந்திருப்பினும், தமிழ்மணம் கருவிப்பட்டையை இணைக்க சிலருக்கு சிக்கல்கள் நேர்கின்றன. ஜாவா ஸ்கிரிப்டை தேடிப்பிடித்து அதில் அந்த நிரலை இட்டு பெறுவதற்குள் பலருக்கும் பொறுமையே போய்விடும். இதற்கு எளிய வழி ஏதேனும் இருக்காதா? என்று தேடிக் களைப்பவரும் உண்டு. அப்படிப்பட்டவர்களுக்காக ஒரு வசதி இருக்கிறதா என்று தேடிப்பார்த்ததில் எனக்கு கிடைத்த லிங்கை உங்களுடன் பகிர்கிறேன். www.tamilmanam.net/tamilmanam/toolbar/blogger.html  இந்த (link)  இணைப்பில் சென்று எளிய முறையில் தமிழ்மணத்தின் கருவிப்பட்டையை பெறலாம்!

Thursday 3 June, 2010

பாலோவர் விட்ஜெட் (புது வலைப் பதிவர்களுக்கு...)

புதிய வலைப்பதிவர்கள் சிலருக்கு பாலோவர் விட்ஜெட் அமைப்பதில் சிக்கல் ஏற்படும்போது அவர்கள் கவனிக்க வேண்டியவை...
உங்கள் கூகிள் கணக்கில் நுழைந்து, வலைத்தளத்தை திறக்கவும். பின்பு செட்டிங்ஸ் என்பதை க்ளிக்கவும். அங்கே-
ஃபார்மெட்டிங்  என்பதை க்ளிக் செய்யவும். இப்போது விரியும் படிவத்தில் லெங்குவேஜ் என்ற வரிசையில் இங்கிலிஷ் என்று கொடுக்கவும். பின்பு  சேவ் செய்க. பின்பு  செட்டிங்ஸ் சென்று ஆட் கெஜட்-ல் சென்று பாலோவர் க்ளிக் செய்க. அவ்வளவுதான்.

Monday 1 March, 2010

உங்கள் வலைத்தளம் ' கூகுள் தேடல்' பட்டியலில் வரவில்லையா?

ஒவ்வொருவரும் வலைத்தளம் ஆரம்பித்த உடன், நமது வலைத்தளமும் பிரபலமாக வேண்டுமென்று நினைப்பார்கள். அப்படி பிரபலமாவதற்கும் பலரையும் சென்றடைவதற்கும் தமிழ்மணம், தமிழிஷ், திரட்டி, தமிழ்வெளி போன்ற பல வழிகள் இருக்கிறது. என்றாலும் கால காலத்திற்கும் நம் வலைத்தளம் பலரையும் சென்றடையும் வழிதான் ' கூகுள் தேடல்'. நீங்கள் கவிதை பற்றிய வலைத்தளம் வைத்திருப்பவர் என்றால், கூகுள் தேடலில் கவிதை என்று கொடுத்தால் உங்கள் வலைத்தளமும் வந்து நிற்கும் என்பதை நீங்களும் அனுபவத்தில் உணர்ந்திருப்பீர்கள்.


புதிதாக வலைத்தளம் ஆரம்பிப்பவர்கள் தங்கள் வலைத்தளம் ஆரம்பித்தவுடன் கூகுளில் மோர் (more) (பார்க்க படம்) என்பதை க்ளிக் செய்து வரும் டயலாக் பாக்ஸில் பிலாக்ஸ் என்பதை க்ளிக் செய்யவும். பின்பு வரும் கூகுள் பிளாக்ஸ் சர்ச் பாக்ஸுக்கு கீழே வட்டமிட்டுக் காண்பிக்கப்பட்டிருப்பதை க்ளிக் செய்யவும்.








இப்போது உங்கள் பிளாக் அட்ரஸை அதில் கொடுத்து சப்மிட் செய்யவும். இனி,உங்கள் வலைத்தளமும் கூகுள் தேடலில் (சர்ச்சில்) இடம் பிடித்திருக்கும்.

Wednesday 27 January, 2010

என்.எச்.எம். ஆன்லைன் கன்வர்ட்டர் வசதி!

நம் கணினியில் உள்ள தமிழ் எழுத்துகளில் தட்டச்சு செய்துவிட்டு, அதை யூனிகோடுக்கு மாற்றியே வலைத்தளத்தில் பதிவேற்றுகிறோம். இதற்காக பொங்கு தமிழ், என்.எச்.எம். கன்வர்ட்டர் போன்றவைகளை பதிவிறக்கம் செய்து வைத்திருப்போம். நானும் அப்படித்தான் செய்து வைத்திருந்தேன். என் கணினியை ஃபார்மெட் செய்தபோது அனைத்து இன்ஸ்டால் செய்யப்பட்ட மென் பொருட்களும் அழிந்துவிட்டது. மீண்டும் அனைத்தும் இன்ஸ்ட்ôல் செய்ய முற்பட்டேன். அப்படித்தான் என்.எச்.எம். கன்வர்ட்டரையும் கூகிளில் தேடிக் கொண்டிருக்கும்போதுதான் என்.எச்.எம். கன்வர்ட்டர் வசதியை ஆன் லைனிலேயே செய்துகொள்ளும் வசதியை தந்திருப்பதை அறிந்து கொண்டேன். இனி என்.எச்.எம். கன்வர்ட்டரை யாரும் இன்ஸ்டால் செய்யத் தேவையில்லை. என்.எச்.எம். ஆன்லைன் கன்வர்ட்டர் வசதிகொண்ட பக்கத்தை நாம் புக் மார்க் வசதி செய்து கொண்டால் போதும். தேவைப்படும் சமயத்தில் அந்தப் பகுதியை ஓப்பன் செய்து நாம் தட்டச்சு செய்த பக்கத்தை பேஸ்ட் செய்து கன்வர்ட் பண்ணிக் கொள்ளலாம்.
வீட்டில் இன்டர்நெட் இல்லாதவர்களுக்கு இந்த வசதி மிகவும் கைகொடுக்கும். என்.எச்.எம். ஆன்லைன் கன்வர்ட்டருக்கு செல்ல க்ளிக்கவும்.

Sunday 17 January, 2010

கேட்டதும் கொடுப்பவனே கூகுள் கூகுள்!

நீங்கள் வாசிக்கும் இடுகைகளைப் பற்றி அதற்கான கருத்துகளை உடனே வெளிப்படுத்தி அவ்வலைப்பூ உரிமையாளரை மகிழ்வித்திருப்பீர்கள். சில சமயம் உங்கள் கருத்துகளை வெளிப்படையாக அவருக்கு கருத்திட முடியாத சூழல் அமைந்திருக்கும். அப்போது அவரின் தொலைபேசி எண் தெரிந்தால் நேரிடையாக பேசலாம். அப்படி தொலைபேசி எண்ணும் கிடைக்காத பட்சத்தில் எப்படி உங்கள் கருத்தை தெரிவிப்பீர்கள்?

இதற்கு கூகுள் ஆண்டவர் வழிகாட்டுகிறார்!

நீங்கள் படித்த வலைப்பூவின் கருத்துரைப் பெட்டியின் அடியில் பார்த்தீர்களென்றால்
இப்படி இருக்கும்-

வட்டமிட்டு காட்டப்பட்டிருக்கும் பெட்டியில் டிக் செய்துவிட்டு, தங்கள் வெளிப்படையான கருத்துகளை மட்டும் தெரிவித்துவிடுங்கள். பின்பு உங்கள் மெயில் பக்கம் வந்திடுங்கள். நீங்கள் படித்த வலை பக்கத்தின் உரிமையாளர் உங்களின் கருத்துக்கு பதில் தந்தாரென்றால் அதன் பிரதி உங்கள் மெயிலுக்கு வந்திருக்கும். அதோடு அவரின் மெயில் முகவரியும் உங்களுக்கு கிடைக்கும். இனி, தனிப்பட்ட முறையில் கருத்துகளை தெரிவிக்க தடை ஏது?