Showing posts with label அறிமுகம். Show all posts
Showing posts with label அறிமுகம். Show all posts

Thursday, 16 February 2012

கவிதைப்போட்டி+ கவிதை நூல் வெளியீடு!



சகோதரி வான்மதி அவர்களை ஆசிரியராகக் கொண்டு பாவையர் மலர் எனும் மாதஇதழ் புதியன விரும்பு எனும் முழக்கத்தோடு வெளிவருகிறது. இதில் சிறுகதை, ஆன்மிகம், நேர்காணல், கவிதைகள்,துணுக்குச் செய்திகள், புத்தக விமர்சனம், வா.மு.கோமு, திலகபாமா ஆகியோர் எழுதும் தொடர்கள், பாவை பதில்கள், இன்னும் இன்னும் சுவராசியமான தகவல்களுடன் வெளிவருகிறது. மாதந்தோறும் கவிதை பரிசுப்போட்டியும் நடத்துகிறார்கள். மார்ச் மாதத்திற்கான தலைப்பு 'மாதவராய் பிறப்பதற்கே...!' இத்தலைப்பில் 16 வரிகளுக்குள் கவிதை எழுதி 25.02.2012க்குள் அனுப்பிவையுங்கள்.
இதழ் முகவரி-
பாவையர் மலர்,
55, வ.உ.சி.நகர், மார்க்கெட் தெரு,
தண்டையார் பேட்டை, சென்னை- 81
தொலைபேசி எண்- 044/2596 4747

•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
மழலைச் சுவடுகள் (தொகுதி-4)
குழந்தைப் பாடல் புதிய தொகுப்பு வெளியிடவிருக்கிறார் கவிஞர் இரா. பன்னீர் செல்வம். அறிவியல் மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் குறித்த சிறுவர்களுக்கு விழிப்புணர்வையும் ஆர்வத்தையும் தூண்டும் வகையில் எளிய சந்த கவிதைகளை (12- 16 அடிகளில்) பாடலுக்கேற்ற படமுடன், 30.06.2012க்குள் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பலாம். விருப்பமுள்ளவர்கள் பங்குத்தொகையாக 100.00 அனுப்பலாம். (கட்டாயமில்லையாம்.)
முகவரி- கவிஞர் பன்னீர் செல்வம்,
மலர் பதிப்பகம்,
5, ஆண்டியப்பன் தெரு, முதல் சந்து,
பழைய வண்ணாரப்பேட்டை,
சென்னை- 600 021
கைபேசி- 9884711802

Wednesday, 27 January 2010

என்.எச்.எம். ஆன்லைன் கன்வர்ட்டர் வசதி!

நம் கணினியில் உள்ள தமிழ் எழுத்துகளில் தட்டச்சு செய்துவிட்டு, அதை யூனிகோடுக்கு மாற்றியே வலைத்தளத்தில் பதிவேற்றுகிறோம். இதற்காக பொங்கு தமிழ், என்.எச்.எம். கன்வர்ட்டர் போன்றவைகளை பதிவிறக்கம் செய்து வைத்திருப்போம். நானும் அப்படித்தான் செய்து வைத்திருந்தேன். என் கணினியை ஃபார்மெட் செய்தபோது அனைத்து இன்ஸ்டால் செய்யப்பட்ட மென் பொருட்களும் அழிந்துவிட்டது. மீண்டும் அனைத்தும் இன்ஸ்ட்ôல் செய்ய முற்பட்டேன். அப்படித்தான் என்.எச்.எம். கன்வர்ட்டரையும் கூகிளில் தேடிக் கொண்டிருக்கும்போதுதான் என்.எச்.எம். கன்வர்ட்டர் வசதியை ஆன் லைனிலேயே செய்துகொள்ளும் வசதியை தந்திருப்பதை அறிந்து கொண்டேன். இனி என்.எச்.எம். கன்வர்ட்டரை யாரும் இன்ஸ்டால் செய்யத் தேவையில்லை. என்.எச்.எம். ஆன்லைன் கன்வர்ட்டர் வசதிகொண்ட பக்கத்தை நாம் புக் மார்க் வசதி செய்து கொண்டால் போதும். தேவைப்படும் சமயத்தில் அந்தப் பகுதியை ஓப்பன் செய்து நாம் தட்டச்சு செய்த பக்கத்தை பேஸ்ட் செய்து கன்வர்ட் பண்ணிக் கொள்ளலாம்.
வீட்டில் இன்டர்நெட் இல்லாதவர்களுக்கு இந்த வசதி மிகவும் கைகொடுக்கும். என்.எச்.எம். ஆன்லைன் கன்வர்ட்டருக்கு செல்ல க்ளிக்கவும்.

Thursday, 20 August 2009

புதிய வலைப்பக்கம் ஏன்?



வலையுலக தோழர்களுக்கு வணக்கம்.

இதுவரை ‘இலக்கியா’, ‘கவிதைகுரல்’ மூலம் உங்களை சந்தித்து வந்த இந்த குடந்தை அன்புமணி இப்போது ‘தகவல்மலர்’ என்ற புதிய வலைப்பக்கம் மூலமும் சந்திக்கவிருக்கிறேன். வலையுலகிற்கு புதிது புதிதாக பலரும் வந்து கொண்டிருக்கிறார்கள். அப்படி வரும் பலரும் வலையுலகில் அவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை கேட்கிறார்கள். நாமும் அவர்களுக்கு முடிந்தவரையில் உதவி வருகிறோம்.பல இடுகைகளையும் இட்டு விளக்கம் தருகிறோம். அந்த இடுகைகள் எல்லாம் காலப்போக்கில் எங்கிருக்கிறது என்று தெரியாதபடிக்கு நிறைய இடுகைகள் இடுவதால் புதியவர்கள் கேட்கும்போது தேட வேண்டியிருக்கிறது.

இனி அப்படி தேடக்கூடாது. அவர்கள் கேட்கும்போது அவர்களுக்கு கிடைக்க வேண்டும். அவர்கள் சந்தேகங்கள் தீர வேண்டும் என்ற ஆவலில் இந்த வலைப்பதிவை ஆரம்பித்துள்ளேன்.

வலையுலகம் தொடர்பாக தாங்கள் இதுவரை ஏதேனும் இடுகைகளை இட்டிருப்பின் அதன் லிங்கை தலைப்போடு தரலாம். அதை அனைவரின் பார்வைக்கு படும்படி வெளியிடுகிறேன். அதேபோல் புதிய பதிவர்கள் இங்கு தங்களுக்கு ஏற்படும் இடுகையிடல், புகைப்படம் சேர்த்தல், இடுகைகளை திருத்துதல் போன்ற சந்தேகங்களை கேட்கலாம். அதற்கான விளக்கத்தை நண்பர்கள் தெரிவிப்பார்கள்.

அதோடு வலைப்பதிவர்கள் வலைப்பதிவில் தங்ளுக்கு ஏற்பட்ட சிக்கல்களையும் அதை தாங்கள் தீர்த்த விதத்தையும் இங்கு பகிர்ந்து கொள்ளலாம். அப்படி பகிர்ந்து கொள்ள விரும்புவர்கள் தங்கள் மெயில் முகவரியை தெரிவித்தால் அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும்.
வழக்கம்போல் எனது வலைப்பக்கத்திற்கு வருகை தந்து பின்னூட்டம் இட்டு ஆதரிக்கும் நண்பர்கள் இதற்கும் தங்கள் ஆதரவை தர வேண்டுகிறேன்.

ம்! ஆரம்பியுங்கள்!!