பலர் தவிர்க்கமுடியாத ஒரு விஷயம் ஹேர் டை. ஆம் எனக்கு 17 வயதில் இருந்து தேவை பட்டது. பலருக்கு 30 வயதில் ஆரம்பித்து 45 வயதிற்குள் கண்டிப்பாக நரை என்ற விஷயம் தவிர்க்கமுடியாமல் போகிறது. இதில் என்னை பொறுத்த வரை 75% சதவிகித ஆண் பெண் ஹேர் டை உபயோகத்திற்க்கு ஆளாகின்றனர். இதில் சில பேர் தலைக்கு மட்டும், சிலர் மீசைக்கு, சிலர் தாடிக்கு, சிலர் நெஞ்சு முடிகளுக்கு என்று ஹேர் டை உபயோகம் நம் உடம்பில் ஒரு அங்கமாகிறது. சில பெண்கள் நரை அவ்வளவு இல்லாதவர்கள் மருதாணி அரைத்து போட்டுகொண்டு இருந்ததும் இப்பொழுது அதுவும் ஹேர்டை கம்பெனிகள் மருதாணி, நெல்லிக்காய், என்று எல்லாம் இயற்கை வடிவில் என நமக்கு கெமிக்கல் கலவைதான் கொடுக்கின்றனர்.
இதில் இப்ப நம்மவர்கள் கொஞ்சம் ஸ்மார்ட்டாகி சார் எனக்கு டை பற்றி இப்ப நல்லா தெரியும் அதனால் " நான் அம்மோனியா" தான் போடுவேன் என்று பெருமையாக கூறுவார்கள். ஆனால் நிறைய பேருக்கு அம்மோனியா நான் அம்மோனியா வித்தியாசம் தெரிவதில்லை. தெரிந்தாலும் 50% சதவிகிதம் தான் நீங்கள் ரிஸ்க்கை தவிர்க்கலாம். முதலில் அம்மோனியா டைதான் முன்னைய காலத்தில் பிரபலம். இதில் உள்ள ஒரே வித்தியாசம் இந்த அம்மோனியா டை அடித்தால் கலர் போகவே போகாது. ஆனால் புது முடி வரும்போது கீழே வெள்ளைமுடி தெரியும். அதுபோக அம்மோனிய டை மிக மோசமானது. தொடர்ந்து 10 வருடங்கள் உபயோகித்தால் ஆஸ்மாவும் 15 வருடத்தில் கேன்சர் வர வாய்ப்பிருக்கிறது. அதனால் நான் அம்மோனியா உபயோகித்தால் மட்டும் நல்லது என நினைக்கவேண்டாம். நான் அம்மோனியாவில் தாக்கம் கொஞ்சம் தான் குறைவு மற்றபடி நான் அம்மோனியா டையும் இதே பிரச்சினைகள் தான். மருதாணி நீங்கள் அரைத்து போட்டால் தான் சேஃப், ஆனால் கடையில் விற்கும் ஹென்னா, நெல்லிகாய் ஹேர் டை இதெல்லாம் நமக்கு நாமே நாள் குறிக்கும் ஸ்லோ பாய்ஸன். ஆம் இந்த ஹேர் டையில் முக்கிய நச்சு பொருள் "ஃபீனலியின்டைலமின்" எனும் (Para-Phenylenediamine - PPD ) பொருள் மிக மோசமான ஒரு விஷயம். ஹென்னா எனப்படும் மருதாணி கொடுக்கும் நிறம் சிவப்பு மற்றும் கருஞ்சிவப்பு தான். அதனால் ஹென்னா போட்டு கருப்பு நிறம் ஆனால் கண்டிப்பாக அது பிபிடி உள்ள ஹேர் டைதான். 100% இயற்கை ஹேர் டை என்று ஒரு ஹேர் டை உலகத்தில் இல்லை. இதில் இந்தியர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் ஏன் தெரியுமா - இந்தியர்கள் தான் " நேச்சுரல் பிளாக்" ஃபுல் பிளாக் வண்ணத்தை உபயோகிக்கிறோம். இதில் அதிகமாக கெமிக்கல் கலக்கபடுவதால் ரிஸ்க் அதிகம். நார்மலாக ஒரு சராசரி மனிதன் 10 - 12 முறை டை அடிக்கிறான். இது மிகவும் ஆபாத்தான விஷயம். மீசைக்கு அடிப்பது, நெஞ்சு முடிக்கு அடிப்பது மிக மிக ஆபத்தானது. சிலருக்கு மிக ஸ்லோவாக மூச்சு விட சிரமம் ஆரம்பித்து பிறகு அது ரெகுலர் பிரச்சினையாகிவிடும்.
நிறைய நாடுகளில் இந்த பிபிடியை தடுக்க ஹெல்த் மினிஸ்ட்ரி போராடினாலும் இந்த சலூன்கள் இதை பெருமளவில் மறைத்து டை போடுகின்றனர். டை போடுவதால் முடி கொட்டும் மற்றும் அதிக க்ருப்பு ஷேடுகளை தவிருங்கள். ஒரு பூத கண்ணாடியை வைத்து என்ன கெமிக்கல் உள்ளது என பாருங்கள். ஏன் என்றால் அவ்வளவு சிறிதாக தான் கெமிக்கல் டீட்டெயில் பற்றி போட்டிருப்பார்கள் அந்த கெமிக்கல் டீட்டெயிலை பற்றி கூகுள் செய்யுங்கள் வாழ்க்கையில் டை அடிக்கும் பழக்கத்தை விட்டுவிடுவீர்கள். சரி டை போடுவது நம் வெள்ளை முடியை மறைக்கத்தான் சரி என்ன செய்வது என டை போடும் மனிதர்களை வேண்டுமானால் பார்த்து பரிதாப படலாம் ஆனால் நல்லா கருப்பாய் இருக்கும் முடியை பான் பராக், காரக்குழம்பு தலையாக்கும் இளைஞன் இளைஞிகளை நினைத்தால் தான் மிக பரிதாபம். ஏன் என்றால் அவர்கள் ஒரு தடவை பயன்படுத்தினால் வாழ்க்கை முழுவது அந்த கலரை போட வேண்டும் இல்லையெனில் அதை விட்டால் நான் கடவுள் ஆர்யா போலத்தான் ஆகவேண்டும். முழுவதும் விட மொட்டை அடித்து புது முடி வளர்ப்பதை தவிர வேறு ஒன்றும் பண்ணமுடியாது. ஆண்கள் பரவாயில்லை பெண்கள் தான் பாவம் மொட்டையும் அடிக்கமுடியாது, கலர் பண்னும் பழக்கத்தையும் விட முடியாது. நிறைய பேர் கல்யானத்திற்க்கு முன் இந்த தவறை செய்வதால் கல்யானம் ஆன பிறகு கணவர்களின் முக்கிய முகம் சுழிப்பு இந்த விஷயம் தான் அதுவும் கூட்டு குடும்பத்தில் சான்ஸே இல்லை. முடிந்த அளவு டை உபயோகத்தை கட்டுபடுத்துங்கள். இரண்டாவது வெளியே செல்லும் நாட்களில் மட்டும் பழைய டெக்னிக் "ஐடெக்ஸ்" கண்மை போட்டு போங்கள் சிலர் வெள்ளை முடியுடன் இருக்க பழகி கொள்ளுங்கள் இல்லையெனில் அட்லிஸ்ட் மாதம் ஒரு முறை என்பதை தவிர்த்து இரண்டு மாதத்திற்கு ஒரு முறை என்று மாற்றினால் பிரச்சினையை தள்ளிப்போடலாம். கர்ப்பிணி பெண்கள் பத்து மாதம் தயவு செய்து போடவே வேண்டாம். இரண்டு கலவை மிக்ஸ் பன்னும் ஹேர் டை 100% பயன்படுத்துவதை தவிருங்கள் இதில் கண்டிப்பாக பிபிடி இருக்கும்
நன்றி- http://www.facebook.com/nagravi1
Thursday, 8 March 2012
Subscribe to:
Post Comments (Atom)
15 comments:
hair dye avasiyamaa endu ennubavan naan...
கருமையாக முடி வளர இயற்கையாகவே பல மூலிகைகள் நமக்கு கிடைக்கிறது. காய்கறிகள், கறிவேப்பிலை அதிகம் சேர்த்துக் கொள்ளவேண்டும்.
//suryajeeva said...
hair dye avasiyamaa endu ennubavan naan...
8 March 2012 10:51 PM //
உங்களுக்கு என்ன சார் முடியை கரு கரு என வச்சிருக்கீங்க. உங்க ஜீன் அப்படி பிறகு ஏன் எங்களை பார்த்து கேக்க மாட்டீங்க :(((
அன்புமணி சார், மிக பயனுள்ள பதிவு.
தகவலுக்கு மிக்க நன்றி
தலைக்குள்ளே என்ன இருக்கு என்பதுதான் முக்கியம் ..
Thank you.
வாழ்த்துகள்.
புதிய கோணங்கி... தங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...
//"என் ராஜபாட்டை"- ராஜா said...
தலைக்குள்ளே என்ன இருக்கு என்பதுதான் முக்கியம் ..//
தங்கள் கருத்து சும்மா நச்சுன்னு இருக்கு...
//! சிவகுமார் ! said...
Thank you.//
welcome
//Rathnavel Natarajan said...
வாழ்த்துகள்.//
தகவல் தந்ததுக்குன்னு எடுத்துக்குறேன்... நன்றி...
நான் அதெல்லாம் விட்டு வருடக்கணக்கா ஆச்சு!
தங்கள் பதிவை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன். நேரம் கிடைக்கும் போது வந்து பாருங்கள். நன்றி.
http://blogintamil.blogspot.com.au/2012/03/blog-post_17.html
எச்சரிக்கை பதிவிற்கு நன்றி
நண்பர்களே. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.
நன்றி
யாழ் மஞ்சு
உண்மையில் பயனுள்ள நல்ல தகவல். அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய செய்தி.பாராட்டுக்கள்.
Post a Comment
உங்கள் கருத்துக்கள் எனக்கு ஊக்கமளிக்கும். மேம்படுத்தும். தயவு செய்து முகம் சுளிக்கத்தக்க பின்னூட்டங்களை தவிருங்கள்.