Monday, 26 September 2011

செப்டம்பர் மாத பதிவர் தென்றல் இதழில் இடம்பெற்ற பதிவர்கள்...


அடுத்த பதிவர் தென்றல் மாதஇதழ் வெளிவந்துவிட்டது...
பதிவர்களின் படைப்புகளை மட்டுமே தாங்கி வரும் பதிவர் தென்றல் செப்டம்பர் இதழில் இடம்பெறும் படைப்பாளிகள்...

ஈரோடு கதிர்

கமலா

சிமுலேசன்

சைபர்சிம்மன்

ராஜூ

சசிகுமார்

கேபிள்சங்கர்

சுரேகா

புதுகை தென்றல்

தமிழ்உதயம்

சொல்கேளான் ஏ.வி.கிரி

சண்முகவேல்

என். கணேசன்

இந்திரா

யாழினி


குடந்தை அன்புமணி


உங்கள் படைப்புகளும் இடம்பெற உங்களின் வலைத்தள முகவரியையும், உங்களின் முகவரியையும் எனக்கு மெயில் செய்யுவும்.
இதழுக்கு சந்தா கட்டி ஆதரவு தருக. சந்தா செலுத்துபவர்களுக்கு புத்தகம் அனுப்பி வைக்கப்படும்.

Thursday, 15 September 2011

பதிவர் சந்திப்பு

செப்டம்பர் 4ந்தேதி யூத் பதிவர் சந்திப்பு என்றதும் நிச்சயம் கலந்துகொள்ள வேண்டும் (இல்லேன்னா நான் யூத் இல்லைன்னு நினைச்சிடுவாங்களோன்னு) உடனே முடிவெடுத்தேன். அருமை தங்கமணிக்கிட்ட அனுமதி வாங்கிட்டு (ஞாயிற்றுக்கிழமை ஒருநாள்தான் லீவு. அன்னைக்கும் வீட்டுல உள்ளவங்களோட இல்லேன்னா எப்படி? என்று முணுமுணுத்தவளை தாஜா செய்துவிட்டு) கிளம்பினேன்.
கவுண்டமணி பேன்ஸ் வலைத்தளத்தில் இருந்த விஐபி. நம்பருக்கு போன் செய்து என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். இறக்குமிடம் பற்றி விசாரிப்பு... (அடிக்கடி பதிவர் சந்திப்பு டிஸ்கவரி புக் பேலஸில் நடந்தாலும் நான் கலந்து கொள்வது இது முதல்முறை அதான் முகவரி விசாரிப்பு... காரணம்... அதான் மேலே விரிவா எழுதியிருக்கேனே...)
ஐந்தரை மணியிருக்கும்போது கே. கே. நகரில் இருந்தேன். சற்று நேர தடுமாற்றத்திற்கு பிறகு பாண்டிச்சேரி விருந்தினர் மாளிகை கண்ணில் பட்டது. அருகி-ருந்த டீக்கடையில் நின்றவர்கள் எல்லாரும் பதிவர்களாகவே தெரிந்தார்கள். எல்லாம் பிரமை...
உத்தேசமாக சாலையில் நடந்தேன்... சில அடிதூரம் நடந்த பின்பு கண்டேன்... டிஸ்கவரி புக் பேலஸை. வாசலில் தண்ணீர் பாட்டில்களுடன் (நிச்சயமாங்க அது தண்ணீர் பாட்டில்தான்) இரண்டுபேர் நின்று கொண்டிருந்தார்கள். அவர்களிடம் என்னை அறிமுகம் செய்ய... அவர்கள் சிவகுமார் என்றும் கருண் என்றும் அறிமுகப்படுத்திக் கொண்டார். அவர்களுடன் மாடிக்கு சென்றேன். மாடியில் பிலாசபி பிரபாகரன், தம்பி கூர்மதி, அஞ்சா சிங்கம், நா. மணிவண்ணன் மற்றும் இன்னும் சிலர் பெயர் ஞாபகத்தில் இல்லை. அவர்களனைவருக்கும் பதிவர் தென்றலை அறிமுகப்படுத்தினேன். அவர்களின் முகத்தில் மகிழ்ச்சி பொங்கியது. (பொங்கியது?)
நிகழ்ச்சி நடக்கும் அறைக்குள் சென்றோம். அங்கு ஏற்கெனவே அமர்ந்திருந்த சென்னைப்பித்தன், தமிழ் சிபியூ ராஜ்குமாரை (இருவரையும்தான் பார்த்ததும் அடையாளம் தெரிந்தது. மற்றவர்கள் எல்லாம் தங்களின் பழைய படங்களைத்தான் வலைத்தளத்தில் வெளியிட்டிருக்கிறார்கள். உஷாராக இருங்கள்)
ஒருவரை பார்த்து நீங்கள் யார்? என்று கேட்டேன். சரியாப்போச்சு என்றார். பக்கத்தி-ருப்பவர் அவர்தான் ஷர்புதீன் என்றார். (யூத் பதிவர் சந்திப்பு என்றதும் மீசையெல்லாம் எடுத்துவிட்டு வந்திருந்தார்.) கவிதைவீதி சௌந்தர் பதிவர் தென்றல் நல்லாருக்கு என்றார். கருண் உங்களை எங்கேயோ பார்த்தமாதிரியிருக்கே? என்றார். எங்கே படிச்சீங்க, எந்த கல்லூரி என்று விசாரித்தார். கடைசிவரை எங்கு பார்த்தார் என்று அவருக்கு தெரியவில்லை. எனக்கும் ஞாபகத்தில் இல்லை.
சிறிது நேரத்தில் ஒவ்வொருவராக வர ஆரம்பித்தனர். கேபிள் சங்கர் உள்ளே வந்ததும் ஆட்டம் ஆரம்பித்தது. வந்திருந்தவர்களை எல்லாரையும் திரும்பி பார்த்தேன். எனக்கு தெரிந்த தலைகள் என்று பார்த்தால்... கேபிள் சங்கர், லக்கி, ஜாக்கி சேகர்... மற்றவர்கள் அனைவரும் புதிய முகமாகவே தெரிந்தார்கள்.
டிஸ்கவரி புக் பேலஸ் உரிமையாளர் வந்து பார்த்துவிட்டு சென்றார். அவருக்கும் பதிவர் தென்றல் கொடுத்தேன். பார்த்துவிட்டு நல்லாருக்கே... நம்ம கடை விளம்பரமும் போட்டுடலாம்... போகும்போது என்னைப் பாருங்க... என்றார். (அய்... ஒரே கல்-லே ரெண்டு மாங்கா... பதிவர் சந்திப்பு + விளம்பரம்)
பதிவர்கள் தங்களை அறிமுகப்படுத்திக்கொள்ளும் நிகழ்ச்சி நடந்தேறியது. இந்த பதிவர் சந்திப்பில் சில வாசகர்களும் கலந்துகொண்டார்கள். அவர்களை கேபிளார் அய்... வாசகர்... என்று கலாய்த்துக்கொண்டிருந்தார். அந்த வாசகர் வலைத்தளம் தொடங்க ஆர்வம் வந்துவிட்டதாக சொல்ல... வடை போச்சே... என்றார்.
மாஸ் (நிஜமாலுமே அவர்தான் யூத்... கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கிறார்) என்பவர் ஜாக்கியின் வலைத்தளம்தான் முதலில் படித்தது, ஜாக்கிதான் எனக்கு முதல் பின்னூட்டம் இட்டது... என்று வார்த்தைக்கு வார்த்தை ஜாக்கி புராணம் பாடினார். இதுக்கு எவ்வளவு செலவாச்சு என்று கேபிளார் கலாய்த்தார்.
ஒவ்வொருவரின் அறிமுகத்துக்கு பிறகு, பதிவர்களுக்கு டிப்ஸ் வழங்க வந்தார் லக்கி. பதிவுகளின் நீளத்தை குறைத்து சுருக்கமாக (யாருக்காக.... இது யாருக்காக....) இடுகையிடவும், தலைப்பை வசீகரமாக வைக்கும்படியும் வற்புறுத்தினார். தலைப்பு வைப்பதில் எழுத்தாளர் சுஜாதாவை பின்பற்றும்படி கூறினார். இடுகையிட எதுவும் தோன்றவில்லை என்று சொல்வதை ஏற்பதற்கில்லை என்றார். செய்தித்தாளை படிங்க அதி-ருந்து உங்களுக்கு தோன்றுவதை எழுதுங்க என்றார். (ஆனா, செய்தித்தாளை காப்பி அடிக்காதீங்க இது நமதுகுரல்)
பின்பு உருப்படாதது நரேன் பேசினார். எதைப்பற்றி வேண்டுமானாலும் எழுதுங்க. எதிர்கருத்தை பற்றி கவலைப்படாமல் எழுதுங்க என்றார். பின்னூட்டத்திற்கு பயந்து பலர் எழுதாமல் இருந்துவிடுவதாக கூறினார்.
வாசகர் ஒருவர் கருத்தான இடுகைகள் இடும் பதிவர்கள் மொக்கைகளையும் இடுகிறார்கள். இதை தவிர்க்கலாம் என்றார். (மொக்கையை தவிர்த்தால் பல பதிவர்கள் காணாமல் போய்விடுவார்களே...)
கேபிளார் அவரின் அனுபவத்தை கூறி கேட்டால் கிடைக்கும் இயக்கம் ஆரம்பித்திருப்பது பற்றி தெரிவித்தார். இது பற்றி பின்பு சுரேகாவும் பகிர்ந்துகொண்டார்.
ஜாக்கியும், சாமிதுரை இன்னும் பலர் தனது அனுபவங்களை பகிர்ந்தனர்.
இந்த பதிவர் சந்திப்பு பற்றி எனது ஞாபகத்தில் உள்ளவற்றை இங்கே பகிர்ந்திருக்கிறேன். மற்றவை நம்ம பிலாசபி பிராபாகரன் வலைத்தளத்தில் வரும் திங்கள் அல்லது செவ்வாய் எதிர்பார்க்கலாம்- போட்டோ வும்தான்! வேறு யாரும் போட்டோ எடுத்திருந்தா எனது மெயிலுக்கு விரைந்து அனுப்பி வையுங்க... பதிவர் தென்ற-ல் வெளியிடலாம்.

Monday, 22 August 2011

பதிவர் தென்றல் மாத இதழ் வெளிவந்துவிட்டது...

பதிவர் தென்றல் மாதஇதழ் வெளிவந்துவிட்டது...
பதிவர்களின் படைப்புகளை மட்டுமே தாங்கி வரும் பதிவர் தென்றல் முதல் இதழில் இடம்பெறும் படைப்பாளிகள்...
விதூஷ்
லெஷ்மி
வால்பையன்
கோமாளி செல்வா
செல்வராஜ் ஜெகதீசன்
கவிதைவீதி சௌந்தர்
சமுத்ரா
பூங்குழலி
இராஜராஜேஸ்வரி
ஈரோடு தங்கதுரை
அருள்
இவண் பிகில்
மோகன்குமார்
LIC சுந்தரமூர்த்தி
வடிவேலன்.ஆர்.
வாஞ்சூர்
சென்னை பித்தன்
அமுதாகிருஷ்ணன்
வின்சென்ட்

உங்கள் படைப்புகளும் இடம்பெற உங்களின் வலைத்தள முகவரியையும், உங்களின் முகவரியையும் எனக்கு மெயில் செய்யுவும்.
இதழுக்கு சந்தா கட்டி ஆதரவு தருக. சந்தா செலுத்துபவர்களுக்கு புத்தகம் அனுப்பி வைக்கப்படும்.சந்தா தொகையை அனுப்ப விவரங்கள் மெயிலில் தெரிவிக்கப்படும்.

Tuesday, 2 August 2011

பதிவர்களுக்காக-பதிவரால்...

ஆகஸ்ட் மாதம் முதல் பதிவர்களுக்காக-
பதிவர்களின் படைப்புகளை தாங்கி-
பதிவரால் (என்னால்) வெளியிடப்படுகிறது  பதிவர் தென்றல் மாத இதழ்.
புத்தகம்பெற விருப்பம் உள்ளவர்கள் தங்கள் முகவரியை அஞ்சல் குறியீட்டு எண்ணுடன் எனது மெயிலுக்கு அனுப்பி வையுங்கள்.
தனி இதழ் விலை - ஐந்து மட்டும்.
இரண்டு ஆண்டு கட்டணம் - 120.00 மட்டுமே.
விளம்பரம் செய்ய விரும்புவோரும் தொடர்பு கொள்ளலாம்.
தங்கள் இடுகைகளையும் இதழுக்காக பயன்படுத்திக்கொள்ளலாம் என்று அனுமதி கொடுத்தால் வரும் இதழிகளில் பயன்படுத்திக் கொள்வேன். 
உங்கள் ஆதரவை அன்புடன் எதிர்நோக்குகிறேன்.  
நன்றி.

Monday, 25 July 2011

கூகிள் பிளஸில் இணைந்து விட்டீர்களா?

கூகுள் பிளஸ் பற்றி அறிந்து கொள்ள பலருக்கும் ஆர்வம் உள்ளது. இது பற்றிய செய்திகளை தெரிந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் அல்லது அனுபவம் பெற்றவர்கள் தங்கள் கூகுள் பிளஸில் பெற்ற அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்களேன். கீழே இருக்கும் தொடுப்பு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்குமென எண்ணுகிறேன்.
கூகிள் பிளஸில் இணைந்து விட்டீர்களா?

Tuesday, 5 July 2011

தேடல் மிகுந்த பதிவரா நீங்கள்?

வலைப்பதிவர்களும், வலை திரட்டிகளும் திங்கள் முதல் வெள்ளிவரை மிகவும் பரபரப்பாக இருப்பார்கள். சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் மிகவும் மந்தமாக இருக்கும். தேடல் மிகுந்த பதிவர்கள் சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களை தங்களின் தேடலுக்காக பயன்படுத்திக் கொள்ளலாம்.
என்னதான் வலை திரட்டிகள் இருந்தாலும், புதிய புதிய பதிவர்கள் வந்துகொண்டேயிருக்கிறார்கள். அவர்களை கண்டுபிடிப்பது என்பது அவ்வளவு சுலபமல்ல என்பதே உண்மை. புதிய பதிவர்களையும், நண்பர்களையும் கண்டுபிடிக்க எளிதாக ஒரு வழியிருக்கு. முயற்சித்து பாருங்களேன்.

உங்களின் வலைப்பக்கத்தை தொடக்கி, உங்களின் சுயகுறிப்பு (Profile) பக்கத்தை க்ளிக் செய்யுங்கள். கீழே உள்ள படத்தை பாருங்கள்.


இதுபோல நீங்களும் உங்களுக்கு விருப்பமானவற்றை தங்களின் சுயகுறிப்பு பகுதியில் எழுதியிருப்பீர்கள். உங்களின் விருப்பத்தோடு ஒத்துப்போகும் நண்பர்களை கண்டறிய- உங்களின் விருப்பங்களான- உதாரணத்திற்கு கதை என்றால் அதன்மீது க்ளிக்கினால் உங்களைப்போன்றே கதையை விரும்பும் நபர்களின் பட்டியல் தோன்றும் அந்த வலைத்தளங்களுக்கு சென்று அவர்களை நண்பர்களாக்கிக்கொள்ளுங்கள்.

அல்லது ஆகஸ்ட் மாதம் பதிவர்களின் படைப்புகளை தாங்கி, பதிவர்களுக்காகவே  வெளிவரவிருக்கும் பதிவர் தென்றல் 
மாதஇதழை படியுங்கள். பல புதிய பதிவர்களை கண்டுகொள்ளலாம்.
விவரங்களுக்கு முந்தைய இடுகையை படியுங்கள்... 

Sunday, 3 July 2011

காப்பி பேஸ்ட் செய்ய அனுமதி தேவை!



வலையுலக நண்பர்களே வணக்கம். 
உங்கள் இடுகைகளை காப்பி பேஸ்ட் செய்ய உங்கள் அனுமதி  வேண்டியே   இவ்விடுகை.

உண்மையாகத்தான்... உங்கள் வலைத் தளங்களில் உள்ள இடுகைகளில் நான் தேர்வு செய்திருக்கும் இடுகைகளை உபயோகப் படுத்திக்கொள்ள உங்கள் அனுமதி தேவை.  (அறிவிப்பு விரைவில் வரும்...)

உங்கள் படைப்புகளை தேர்ந்தெடுத்து வெளியிட இருக்கிறேன். அதற்காக உங்கள் ஒவ்வொருவரின் வலைத்தளத்திற்கும் வருகை புரிவேன். உங்கள் வலைத்தளத்தில் வெளியிட்டிருக்கும் கதை, கவிதை, கட்டுரைகள், நகைச்சுவை, சுற்றுலா கட்டுரைகள், 
ஆன்மிக செய்திகள், தாங்கள் வரைந்த ஓவியங்கள், சினிமா விமர்சனங்கள், சினிமா கிசுகிசுக்கள், இன்னும் சுவராசியமான செய்திகள் எதுவுமிருப்பினும் 
அத்தனையும் சுடப்பட்டு வெளியிடப்படும்.

நிச்சயமாக உங்கள் பெயர் மற்றும் வலைத்தள முகவரியும் இடம்பெறும். மேலும் விவரங்களுக்கு முந்தைய இடுகையை படிக்க தவறாதீர்கள்.