Sunday 17 January, 2010

கேட்டதும் கொடுப்பவனே கூகுள் கூகுள்!

நீங்கள் வாசிக்கும் இடுகைகளைப் பற்றி அதற்கான கருத்துகளை உடனே வெளிப்படுத்தி அவ்வலைப்பூ உரிமையாளரை மகிழ்வித்திருப்பீர்கள். சில சமயம் உங்கள் கருத்துகளை வெளிப்படையாக அவருக்கு கருத்திட முடியாத சூழல் அமைந்திருக்கும். அப்போது அவரின் தொலைபேசி எண் தெரிந்தால் நேரிடையாக பேசலாம். அப்படி தொலைபேசி எண்ணும் கிடைக்காத பட்சத்தில் எப்படி உங்கள் கருத்தை தெரிவிப்பீர்கள்?

இதற்கு கூகுள் ஆண்டவர் வழிகாட்டுகிறார்!

நீங்கள் படித்த வலைப்பூவின் கருத்துரைப் பெட்டியின் அடியில் பார்த்தீர்களென்றால்
இப்படி இருக்கும்-

வட்டமிட்டு காட்டப்பட்டிருக்கும் பெட்டியில் டிக் செய்துவிட்டு, தங்கள் வெளிப்படையான கருத்துகளை மட்டும் தெரிவித்துவிடுங்கள். பின்பு உங்கள் மெயில் பக்கம் வந்திடுங்கள். நீங்கள் படித்த வலை பக்கத்தின் உரிமையாளர் உங்களின் கருத்துக்கு பதில் தந்தாரென்றால் அதன் பிரதி உங்கள் மெயிலுக்கு வந்திருக்கும். அதோடு அவரின் மெயில் முகவரியும் உங்களுக்கு கிடைக்கும். இனி, தனிப்பட்ட முறையில் கருத்துகளை தெரிவிக்க தடை ஏது?

5 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அவர்கள் தங்கள் மெயில் ஐடியை வெளிப்படுத்தலாம் என்று செட் செய்து வைத்திருந்தால் தானே தெரியும் .. இல்லையென்றால் பொதுவாக noreply-comment@blogger.com என்று தானே ப்ரம் அட்ரஸ் காட்டும் .. நீங்கள் சொல்வது எனக்கு புரியவில்லையே.. ?

முனைவர் இரா.குணசீலன் said...

பயனுள்ள செய்தி நண்பரே..
தொடர்ச்சியான மறுமொழிகளையும் இதன் வாயிலாக அறிந்து கொள்ளமுடிகிறது..

நட்புடன் ஜமால் said...

முதலில் சொன்னவர் சொன்னதை கொஞ்சம் கவணியுங்க அன்பரே!

அவ்வளவு எளிதில் அடுத்தவர் விடயங்களை கூகில் வெளியே விடாது அது நிறைய எடுத்துக்கும்.

Anonymous said...

Please add some picture in your blogger profile so that your are easily visible in friendconnect.. So many pics are available in images.google.com.

குடந்தை அன்புமணி said...

//முத்துலெட்சுமி/muthuletchumi said...
அவர்கள் தங்கள் மெயில் ஐடியை வெளிப்படுத்தலாம் என்று செட் செய்து வைத்திருந்தால் தானே தெரியும் .. இல்லையென்றால் பொதுவாக noreply-comment@blogger.com என்று தானே ப்ரம் அட்ரஸ் காட்டும் .. நீங்கள் சொல்வது எனக்கு புரியவில்லையே.. ?//

இதுபற்றிய விவரம் எனக்கு தெரியவில்லை. தெரிந்தவர்கள் எனக்கு தெரிவிக்கலாம்.

Post a Comment

உங்கள் கருத்துக்கள் எனக்கு ஊக்கமளிக்கும். மேம்படுத்தும். தயவு செய்து முகம் சுளிக்கத்தக்க பின்னூட்டங்களை தவிருங்கள்.