Tuesday 5 July, 2011

தேடல் மிகுந்த பதிவரா நீங்கள்?

வலைப்பதிவர்களும், வலை திரட்டிகளும் திங்கள் முதல் வெள்ளிவரை மிகவும் பரபரப்பாக இருப்பார்கள். சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் மிகவும் மந்தமாக இருக்கும். தேடல் மிகுந்த பதிவர்கள் சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களை தங்களின் தேடலுக்காக பயன்படுத்திக் கொள்ளலாம்.
என்னதான் வலை திரட்டிகள் இருந்தாலும், புதிய புதிய பதிவர்கள் வந்துகொண்டேயிருக்கிறார்கள். அவர்களை கண்டுபிடிப்பது என்பது அவ்வளவு சுலபமல்ல என்பதே உண்மை. புதிய பதிவர்களையும், நண்பர்களையும் கண்டுபிடிக்க எளிதாக ஒரு வழியிருக்கு. முயற்சித்து பாருங்களேன்.

உங்களின் வலைப்பக்கத்தை தொடக்கி, உங்களின் சுயகுறிப்பு (Profile) பக்கத்தை க்ளிக் செய்யுங்கள். கீழே உள்ள படத்தை பாருங்கள்.


இதுபோல நீங்களும் உங்களுக்கு விருப்பமானவற்றை தங்களின் சுயகுறிப்பு பகுதியில் எழுதியிருப்பீர்கள். உங்களின் விருப்பத்தோடு ஒத்துப்போகும் நண்பர்களை கண்டறிய- உங்களின் விருப்பங்களான- உதாரணத்திற்கு கதை என்றால் அதன்மீது க்ளிக்கினால் உங்களைப்போன்றே கதையை விரும்பும் நபர்களின் பட்டியல் தோன்றும் அந்த வலைத்தளங்களுக்கு சென்று அவர்களை நண்பர்களாக்கிக்கொள்ளுங்கள்.

அல்லது ஆகஸ்ட் மாதம் பதிவர்களின் படைப்புகளை தாங்கி, பதிவர்களுக்காகவே  வெளிவரவிருக்கும் பதிவர் தென்றல் 
மாதஇதழை படியுங்கள். பல புதிய பதிவர்களை கண்டுகொள்ளலாம்.
விவரங்களுக்கு முந்தைய இடுகையை படியுங்கள்... 

13 comments:

நட்புடன் ஜமால் said...

நானும் இப்படி தேடியதுண்டு, விளக்கமா சொன்னதுக்கு நன்றிங்க ...

guna said...

ஆகஸ்ட் மாதம் வெளிவரவிருக்கும் பதிவர் தென்றல்
மாதஇதழை படியுங்கள். good

சிவ.சி.மா. ஜானகிராமன் said...

தாங்கள் குறிப்பிட்ட முறையையே கையாண்டு வருகிறோம்..

இதையும் ஒரு பதிவாக்கித் தந்த தங்களது விவேகத்திற்கு வாழ்த்துக்கள்.

http://sivaayasivaa.blogspot.com

சிவயசிவ

இராஜராஜேஸ்வரி said...

பயனுள்ள பகிர்வுக்கு நன்றி.

குடந்தை அன்புமணி said...

பதிவர் தென்றல் மாத இதழ் தங்களுக்கு கிடைத்திட தங்கள் தெளிவான முகவரியை எனது மெயிலுக்கு அனுப்பி வைக்கவும்.
thambaramanbu@gmail.com

சி.பி.செந்தில்குமார் said...

ada அட

ராமலக்ஷ்மி said...
This comment has been removed by the author.
அமுதா கிருஷ்ணா said...

விளக்கத்திற்கு நன்றி

வே.நடனசபாபதி said...

தகவலுக்கு நன்றி திரு குடந்தை அன்புமணி அவர்களே!

Anonymous said...

நல்ல தகவல், எனக்கு இதுவரை தெரியாது ....

ம.தி.சுதா said...

நல்ல முயற்சி என் வாழ்த்தையும் சேரங்கள்..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
மனித நேயம் கொண்ட தமிழரே எம் பாவம் தீர்ப்போம் வாருங்கள்

சாந்தி மாரியப்பன் said...

ரொம்பவே பயனுள்ள பகிர்வு..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

தகவலுக்கு நன்றி அன்பு....

Post a Comment

உங்கள் கருத்துக்கள் எனக்கு ஊக்கமளிக்கும். மேம்படுத்தும். தயவு செய்து முகம் சுளிக்கத்தக்க பின்னூட்டங்களை தவிருங்கள்.