Tuesday, 2 August 2011

பதிவர்களுக்காக-பதிவரால்...

ஆகஸ்ட் மாதம் முதல் பதிவர்களுக்காக-
பதிவர்களின் படைப்புகளை தாங்கி-
பதிவரால் (என்னால்) வெளியிடப்படுகிறது  பதிவர் தென்றல் மாத இதழ்.
புத்தகம்பெற விருப்பம் உள்ளவர்கள் தங்கள் முகவரியை அஞ்சல் குறியீட்டு எண்ணுடன் எனது மெயிலுக்கு அனுப்பி வையுங்கள்.
தனி இதழ் விலை - ஐந்து மட்டும்.
இரண்டு ஆண்டு கட்டணம் - 120.00 மட்டுமே.
விளம்பரம் செய்ய விரும்புவோரும் தொடர்பு கொள்ளலாம்.
தங்கள் இடுகைகளையும் இதழுக்காக பயன்படுத்திக்கொள்ளலாம் என்று அனுமதி கொடுத்தால் வரும் இதழிகளில் பயன்படுத்திக் கொள்வேன். 
உங்கள் ஆதரவை அன்புடன் எதிர்நோக்குகிறேன்.  
நன்றி.

32 comments:

நட்புடன் ஜமால் said...

நல்ல முயற்சி வெற்றியடைய வாழ்த்துகள்

settaikkaran said...

முயற்சி திருவினை ஆகட்டும். வாழ்த்துகள்.

ஷர்புதீன் said...

:-)

துளசி கோபால் said...

இனிய வாழ்த்து(க்)கள்.

புத்தகம் வெளிநாட்டுக்கும் அனுப்புவீர்களா?

இராஜராஜேஸ்வரி said...

இனிய வாழ்த்துக்கள்.

SCCOBY BLOGSPOT.IN said...

பதிவர் தென்றல் மாத இதழ் பற்றிய அறிவுப்பு நன்கு அமைந்திருந்தது என்னுடைய இடுக்கைகள் மற்றும் எனது ப்லாகில் உள்ள அணைத்து செய்திகளையும் பயன் படுத்திக்கொல்வதில் எனக்கு எந்த விதமான ஆட்சேபனையும் கிடையாது
www.salemscooby.blogspot.com
licsundaramurthy@gmail.com

SCCOBY BLOGSPOT.IN said...
This comment has been removed by a blog administrator.
கவி அழகன் said...

வாழ்த்துக்கள்.

குடந்தை அன்புமணி said...

நன்றி ஜமால், சேட்டைக்காரன்

குடந்தை அன்புமணி said...

தங்களின் மகிழ்ச்சியே என் மகிழ்ச்சியும் ஷர்புதீன்

குடந்தை அன்புமணி said...

துளசி மேடம்...வெளிநாடுகளுக்கும் புத்தகம் அனுப்பி வைக்கப்படும். அதற்குரிய கட்டணம் செலுத்த வேண்டும்.

குடந்தை அன்புமணி said...

தாங்கள் அனுமதி வழங்கியமைக்கு நன்றி...
இராஜேஸ்வரி
LIC SUNDARA MURTHY

குடந்தை அன்புமணி said...

நன்றி கவிஅழகன்

S.Kumar said...

நல்ல முயற்சி...
வெற்றியடைய வாழ்த்துகள்

செல்வா said...

முதலில் பெரிய வாழ்த்துகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேங்க :) உண்மைலேயே பாராட்டப்படவேண்டிய விசயம் நீங்கள் செய்வது. நான் எனது முகவரியை அனுப்புகிறேன் :))

T.V.ராதாகிருஷ்ணன் said...

முயற்சி...
வெற்றியடைய வாழ்த்துகள்

இந்திரா said...

நிஜமாகவே பாராட்ட வேண்டிய விசயம் தான் சார்.
என்னோட வாழ்த்துக்கள்.
பதிவர்களுக்கு மிகுந்த உபயோகமாய் அமையும்.
நல்ல முயற்சி.

pudugaithendral said...

நல்ல முயற்சி,

என்னுடைய பதிவுகளை எடுத்துக்கொள்ளுங்கள்

நன்றி

Prabu Krishna said...

என்னுடைய பதிவுகள் பயன்படுமானால் பயன்படுத்திக் கொள்ளுங்கள் நண்பா...

http://www.baleprabu.com

குடந்தை அன்புமணி said...

நன்றி ...
கோமாளி செல்வா
T.V. ராதாகிருஷ்ணன்
இந்திரா

குடந்தை அன்புமணி said...

தங்கள் பதிவுகளை நிச்சயம் பயன்படுத்திக் கொள்கிறேன்... அனுமதியளித்தமைக்கு நன்றி... புதுகைதென்றல், பலே பிரபு.

முனைவர் இரா.குணசீலன் said...

நல்ல முயற்சி நண்பா.

ஆகாய நதி said...

தங்களின் நல்ல முயற்சிக்கு எனது வாழ்த்துக்களும் வரவேற்பும்....
என்னுடைய பதிவுகள் தங்கள் மாத இதழில் வெளிவருவதற்கு தகுதியானவையாகத் தங்களுக்குத் தோன்றினால் தாங்கள் அதனைப் பயன்படுத்திக்கொள்ளலாம்...

இதனை பற்றி தாங்கள் விரிவாகக் கூறவேண்டும்... நாங்கள் எப்படி பதிவுகளை அனுப்புவது என்றெல்லாம்....

இங்கே கலிஃபோர்னியாவில் வெளிவரும் தென்றல் மாத இதழுக்கும் தங்கள் இதழுக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா?

அணில் said...

தேர்ந்தெடுத்து வெளியிடும்போது எங்களுக்குப் பெருமைதான். http://tamilcpu.blogspot.comல் உள்ள இடுகைகளைத் தாராளமாக பயன்படுத்திக் கொள்ளலாம். நன்றி.

குடந்தை அன்புமணி said...

//முனைவர்.இரா.குணசீலன் said...

நல்ல முயற்சி நண்பா.//

நன்றி நண்பரே... வரும் இதழ்களில் தங்களின் இடுகைகளையும் பயன்படுத்திக்கொள்ளலாமா?

குடந்தை அன்புமணி said...

//ஆகாய நதி said...

தங்களின் நல்ல முயற்சிக்கு எனது வாழ்த்துக்களும் வரவேற்பும்....
என்னுடைய பதிவுகள் தங்கள் மாத இதழில் வெளிவருவதற்கு தகுதியானவையாகத் தங்களுக்குத் தோன்றினால் தாங்கள் அதனைப் பயன்படுத்திக்கொள்ளலாம்...//

மிக்க நன்றி...

//இதனை பற்றி தாங்கள் விரிவாகக் கூறவேண்டும்... நாங்கள் எப்படி பதிவுகளை அனுப்புவது என்றெல்லாம்.... //

தங்கள் வலைத்தளத்திற்கு நான் பார்வையிட்டு எனக்கு பிடித்தமான படைப்புகளை காப்பி செய்து கொள்வேன். அதற்குதான் தங்கள் அனுமதி வேண்டும்.

//இங்கே கலிஃபோர்னியாவில் வெளிவரும் தென்றல் மாத இதழுக்கும் தங்கள் இதழுக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா?//

இல்லை. கலிபோர்னியாவரை என் இதழும் சென்றால் மகிழ்வேன்...

குடந்தை அன்புமணி said...

தங்களின் அனுமதிக்கு நன்றி... ராஜ்குமார்...

vidivelli said...

அன்புடன் வாழ்த்துக்கள்..

ஆமினா said...

வாழ்த்துக்கள் சகோ

நல்ல முயற்சி!!!

Saravana Kumar said...

மிகச் சிறந்த வலைப்பூவிற்குப் பரிசு என்று அறிவித்தது என்ன ஆயிற்று? வலைப்பூவில் எதுவும் பரிசுக்கு ஏற்றதாக இருக்கவில்லையோ?

குடந்தை அன்புமணி said...

//Saravana Kumar said...

மிகச் சிறந்த வலைப்பூவிற்குப் பரிசு என்று அறிவித்தது என்ன ஆயிற்று? வலைப்பூவில் எதுவும் பரிசுக்கு ஏற்றதாக இருக்கவில்லையோ?//

ஜூலைமாத இன்ப அதிர்ச்சி என்ன?
வலைப்பூவிற்கு பரிசா?
வலைப்பூவிற்கு விருதா?
புதிய மாதஇதழா?
புதிய வலைத்தளமா? என்ன என்பதை தங்களை கணிக்கும்படிதான் கூறியிருந்தேன்.
அதன்படி தற்போது பதிவர் தென்றல் என்ற மாதஇதழை ஆரம்பித்திருக்கிறேன். நன்றி.

Saravana Kumar said...

நன்றி.

Post a Comment

உங்கள் கருத்துக்கள் எனக்கு ஊக்கமளிக்கும். மேம்படுத்தும். தயவு செய்து முகம் சுளிக்கத்தக்க பின்னூட்டங்களை தவிருங்கள்.