Thursday, 3 June 2010

பாலோவர் விட்ஜெட் (புது வலைப் பதிவர்களுக்கு...)

புதிய வலைப்பதிவர்கள் சிலருக்கு பாலோவர் விட்ஜெட் அமைப்பதில் சிக்கல் ஏற்படும்போது அவர்கள் கவனிக்க வேண்டியவை...
உங்கள் கூகிள் கணக்கில் நுழைந்து, வலைத்தளத்தை திறக்கவும். பின்பு செட்டிங்ஸ் என்பதை க்ளிக்கவும். அங்கே-
ஃபார்மெட்டிங்  என்பதை க்ளிக் செய்யவும். இப்போது விரியும் படிவத்தில் லெங்குவேஜ் என்ற வரிசையில் இங்கிலிஷ் என்று கொடுக்கவும். பின்பு  சேவ் செய்க. பின்பு  செட்டிங்ஸ் சென்று ஆட் கெஜட்-ல் சென்று பாலோவர் க்ளிக் செய்க. அவ்வளவுதான்.

Monday, 1 March 2010

உங்கள் வலைத்தளம் ' கூகுள் தேடல்' பட்டியலில் வரவில்லையா?

ஒவ்வொருவரும் வலைத்தளம் ஆரம்பித்த உடன், நமது வலைத்தளமும் பிரபலமாக வேண்டுமென்று நினைப்பார்கள். அப்படி பிரபலமாவதற்கும் பலரையும் சென்றடைவதற்கும் தமிழ்மணம், தமிழிஷ், திரட்டி, தமிழ்வெளி போன்ற பல வழிகள் இருக்கிறது. என்றாலும் கால காலத்திற்கும் நம் வலைத்தளம் பலரையும் சென்றடையும் வழிதான் ' கூகுள் தேடல்'. நீங்கள் கவிதை பற்றிய வலைத்தளம் வைத்திருப்பவர் என்றால், கூகுள் தேடலில் கவிதை என்று கொடுத்தால் உங்கள் வலைத்தளமும் வந்து நிற்கும் என்பதை நீங்களும் அனுபவத்தில் உணர்ந்திருப்பீர்கள்.


புதிதாக வலைத்தளம் ஆரம்பிப்பவர்கள் தங்கள் வலைத்தளம் ஆரம்பித்தவுடன் கூகுளில் மோர் (more) (பார்க்க படம்) என்பதை க்ளிக் செய்து வரும் டயலாக் பாக்ஸில் பிலாக்ஸ் என்பதை க்ளிக் செய்யவும். பின்பு வரும் கூகுள் பிளாக்ஸ் சர்ச் பாக்ஸுக்கு கீழே வட்டமிட்டுக் காண்பிக்கப்பட்டிருப்பதை க்ளிக் செய்யவும்.








இப்போது உங்கள் பிளாக் அட்ரஸை அதில் கொடுத்து சப்மிட் செய்யவும். இனி,உங்கள் வலைத்தளமும் கூகுள் தேடலில் (சர்ச்சில்) இடம் பிடித்திருக்கும்.

Wednesday, 27 January 2010

என்.எச்.எம். ஆன்லைன் கன்வர்ட்டர் வசதி!

நம் கணினியில் உள்ள தமிழ் எழுத்துகளில் தட்டச்சு செய்துவிட்டு, அதை யூனிகோடுக்கு மாற்றியே வலைத்தளத்தில் பதிவேற்றுகிறோம். இதற்காக பொங்கு தமிழ், என்.எச்.எம். கன்வர்ட்டர் போன்றவைகளை பதிவிறக்கம் செய்து வைத்திருப்போம். நானும் அப்படித்தான் செய்து வைத்திருந்தேன். என் கணினியை ஃபார்மெட் செய்தபோது அனைத்து இன்ஸ்டால் செய்யப்பட்ட மென் பொருட்களும் அழிந்துவிட்டது. மீண்டும் அனைத்தும் இன்ஸ்ட்ôல் செய்ய முற்பட்டேன். அப்படித்தான் என்.எச்.எம். கன்வர்ட்டரையும் கூகிளில் தேடிக் கொண்டிருக்கும்போதுதான் என்.எச்.எம். கன்வர்ட்டர் வசதியை ஆன் லைனிலேயே செய்துகொள்ளும் வசதியை தந்திருப்பதை அறிந்து கொண்டேன். இனி என்.எச்.எம். கன்வர்ட்டரை யாரும் இன்ஸ்டால் செய்யத் தேவையில்லை. என்.எச்.எம். ஆன்லைன் கன்வர்ட்டர் வசதிகொண்ட பக்கத்தை நாம் புக் மார்க் வசதி செய்து கொண்டால் போதும். தேவைப்படும் சமயத்தில் அந்தப் பகுதியை ஓப்பன் செய்து நாம் தட்டச்சு செய்த பக்கத்தை பேஸ்ட் செய்து கன்வர்ட் பண்ணிக் கொள்ளலாம்.
வீட்டில் இன்டர்நெட் இல்லாதவர்களுக்கு இந்த வசதி மிகவும் கைகொடுக்கும். என்.எச்.எம். ஆன்லைன் கன்வர்ட்டருக்கு செல்ல க்ளிக்கவும்.

Sunday, 17 January 2010

கேட்டதும் கொடுப்பவனே கூகுள் கூகுள்!

நீங்கள் வாசிக்கும் இடுகைகளைப் பற்றி அதற்கான கருத்துகளை உடனே வெளிப்படுத்தி அவ்வலைப்பூ உரிமையாளரை மகிழ்வித்திருப்பீர்கள். சில சமயம் உங்கள் கருத்துகளை வெளிப்படையாக அவருக்கு கருத்திட முடியாத சூழல் அமைந்திருக்கும். அப்போது அவரின் தொலைபேசி எண் தெரிந்தால் நேரிடையாக பேசலாம். அப்படி தொலைபேசி எண்ணும் கிடைக்காத பட்சத்தில் எப்படி உங்கள் கருத்தை தெரிவிப்பீர்கள்?

இதற்கு கூகுள் ஆண்டவர் வழிகாட்டுகிறார்!

நீங்கள் படித்த வலைப்பூவின் கருத்துரைப் பெட்டியின் அடியில் பார்த்தீர்களென்றால்
இப்படி இருக்கும்-

வட்டமிட்டு காட்டப்பட்டிருக்கும் பெட்டியில் டிக் செய்துவிட்டு, தங்கள் வெளிப்படையான கருத்துகளை மட்டும் தெரிவித்துவிடுங்கள். பின்பு உங்கள் மெயில் பக்கம் வந்திடுங்கள். நீங்கள் படித்த வலை பக்கத்தின் உரிமையாளர் உங்களின் கருத்துக்கு பதில் தந்தாரென்றால் அதன் பிரதி உங்கள் மெயிலுக்கு வந்திருக்கும். அதோடு அவரின் மெயில் முகவரியும் உங்களுக்கு கிடைக்கும். இனி, தனிப்பட்ட முறையில் கருத்துகளை தெரிவிக்க தடை ஏது?

Thursday, 29 October 2009

இழு நீள் சுட்டி Drop Down Menu

இதைபோன்ற drop down menu உங்கள் பதிவுகளுக்கும் வேண்டுமா. labels தான் இருக்கே என்றாலும், labels-சை கிளிக் செய்தால் வரிசையாக ஒன்றன் கீழ் ஒன்றாக உங்கள் பதிவுகள் அலுப்பைத் தரக்கூடும். அதற்குப் பதிலாக title/தலைப்பு வாரியாக இப்படி தொகுத்துக் கொண்டால் ஒரு நிலையில் உங்களுக்கே கூட இது பிரயோஜனமாக இருக்கலாம்.

முதலில் உங்கள் பதிவுகளின் title மற்றும் link இரண்டையும் எப்படி சுலபமாக copy செய்வது என்று பார்க்கலாம்.










  1. மேலே படத்தில் காட்டியபடி உங்கள்  blog archive-வை அப்படியே select செய்து ஒரு excel worksheet-டில் column A-வில் copy-paste செய்யவும்.
  2. column-B-யில் =getURL(A1)ன்ற formula-வை type செய்தால், உங்கள் post-டின் hyperlink மட்டும் தனியாக வந்து விடும். கீழுள்ள அடுத்தடுத்த cell-களில் இந்த formula-வை copy paste செய்யவும்.
  3. இப்போது column-A-வை copy செய்து Column-C-யில் paste special, values ஆக paste செய்யுங்கள். உங்கள் தலைப்பு மட்டும் தனியாக வந்து விடும்.
  4. column D-யில் கீழ்க்கண்டவாறு formula-க்களை நிரப்பவும்.

    =CONCATENATE("<#option value="""#,B68,"/"/#>",C68)
    இதில் உள்ள #களை நீக்கி விட்டு type செய்யவும். இந்தப் பதிவில் html தகராறு செய்வதால், # include செய்யுமாறு ஆயிற்று. சிரமத்திற்கு வருந்துகிறேன்.
     

    இப்போது column D-யில் இந்த மாதிரி ஒரு code வந்திருக்கும்.
    <#option value="http://vidhoosh.blogspot.com/2009/10/blog-post_03.html"/#>மேஜை
    (#களை நீக்கிப்பார்க்க)


இப்படி எல்லா posting-களையும் வகைபடுத்திய பின், அதை html code ஆக எப்படி மாற்றுவது. இதற்கும் ஒரு சுலபமான வழி உள்ளது.

உதாரணத்திற்கு உங்கள் வலைப்பூவில் கவிதை மற்றும் கதை என்ற label-கள் இருப்பதாக வைத்துக் கொள்ளலாம். dropdown-னில் முதல் வரியாக இந்த label இருந்தால்தான் உங்கள் கவிதைகளைத் தனியாகவும் கதைகளைத் தனியாகவும், தனித்தனி dropdown ஆக காட்ட முடியும்.
  1. முதலில் ஒரு notepad-டில் இந்த code-டை type செய்யவும். #select#> (# இல்லாமல் type செய்க) notepad-டை மறக்காமல் save செய்யவும். இது dropdown செய் என்பதற்கான கட்டளை ஆகும். 
  2. பின்பு உங்கள் dropdown menu-வின் அகல நீளத்தை உங்கள் sidebar-களின் அளவிற்கு ஏற்ப நிர்ணயம் செய்து கொள்ளுங்கள். அடுத்து இந்த code-டை type செய்யவும்.
    <#select onchange="location = '' +(this.options[this.selectedIndex].value);" style="width: 20em;#"> (# இல்லாமல் type செய்க)
    இதில் width: 20em என்ற இடத்தில் நீங்கள் அகலத்தை கூட்டியும் குறைத்தும் காட்டலாம்.
  3. அடுத்து வருவது உங்கள் பதிவுகளின் தொகுப்புப் பெயர் உதா: கவிதை என்றால் இப்படி code எழுதவும். <#option value=""http://vidhoosh.blogspot.com/"/#>கவிதை (# இல்லாமல் type செய்க) . இதில் என் blog பெயர் தெரியும் இடத்தில் உங்கள் blog address-சை தரவும். கவிதை என்ற இடத்தில் உங்கள் label இடவும்.
  4. உங்கள் excel worksheet-ட்டில் column-D யில் தெரியும் code-களை மட்டும் copy செய்து notepad-டில் இந்த code-டின் கீழ் paste செய்யவும்.
  5. கொஞ்சம் பொறுமையாக செயல்பட்டால், அதிகக் குழப்பம் இல்லாமல் உங்கள் labelகளையும், பதிவுகளையும் dropdown-ஆக எளிதில் மாற்றலாம். 
  6. உங்கள் notepad-டில் html code இப்போது இவ்வாறு இருக்கும்.
<#/select#>
<
#select onchange="location = '' +(this.options[this.selectedIndex].value);" style="width: 20em;"#>
<
#option value=""http://vidhoosh.blogspot.com/"/#>கவிதை
<
#option value="http://vidhoosh.blogspot.com/2009/10/blog-post_03.html"/#>மேஜை
(#களை நீக்கிப்பார்க்க)


இதன் கீழ் வரிசையாக ஒன்றன் கீழ் ஒன்றாக உங்கள் அனைத்து கவிதைகளின் codeகளையும் paste செய்யுங்கள்.
இதை அப்படியே உங்கள் blog layout ஆப்ஷனில் உள்ள ADD A GADGET-டில் இருக்கும் HTML/JavaScript box-சில் நிரப்பினால் அவ்வளவுதான் உங்கள் dropdown code தயார்.


செய்து பார்த்து அசத்துங்கள். வாழ்த்துக்கள்.


--விதூஷ்.




.







Monday, 5 October 2009

ப்லாக் ஆதர் கமெண்டை எப்படி தனியாக காட்டுவது

===================================================================
Blog Author / Blog Owner - உங்கள் கமெண்ட்களை
தனியாகத் தெரிய வைக்க வேண்டுமா?
===================================================================
template-டில் எந்த மாற்றமும் செய்யும் முன், உங்கள் பழைய template-டை backup செய்து கொள்ளுங்கள். back up எப்படி செய்வது?

மேலே படத்தில் காட்டியபடி உங்கள் blog முதல் பக்கத்தில் customise என்ற லிங்கை க்ளிக் செய்யுங்கள்.
===================================================================


மேலே
படத்தில் காட்டிய பக்கம் வரும்.
edit html என்ற லிங்கை க்ளிக் செய்யுங்கள்.

===================================================================


expand widget templates
என்ற checkbox-ஸில் tick செய்யவும்.

===================================================================





download
full template என்ற லிங்கை க்ளிக் செய்து
உங்கள்
பழைய
template-டை backup செய்யவும்.

===================================================================

மேலே படத்தில் காட்டியவாறே, ctrl+f (find) கீக்களை (keys)
ஒரே
நேரத்தில் அழுத்தி,

]]></b:skin>

என்ற script-டை தேடுங்கள்.

===================================================================

]]></b:skin>
இந்தக் code-டுக்கு சரி மேலே கீழ்கண்ட script-டை

.author-comments {
background: #cccccc;
border: 2px dotted #e6e6e6;
padding: 5px;
}


copy-paste செய்யுங்கள்.

===================================================================

பிறகு இந்தக் script-டை தேடுங்கள். (find)


<a expr:href='data:comment.authorUrl' rel='nofollow'><data:comment.author/></a>

===================================================================
இந்தக் script-டுக்குப் பிறகு கீழ்க்கண்ட ஐந்து வரிகள் இருக்கும்.
<b:else/>
<data:comment.author/>
</b:if>
said...
</dt>


இந்த ஐந்து வரிகளுக்குக் கீழ், இந்தக் script-டை copy-paste செய்யுங்கள்.


<b:if cond='data:comment.author == data:post.author'>
<dd class='comment-body-author'>
<p><data:comment.body/></p>
</dd>

<b:else/>




===================================================================
இதற்கு அடுத்த வரிகள் இவ்வாறு இருக்கும்.
<dd class='comment-body'>
<b:if cond='data:comment.isDeleted'>
<span class='deleted-comment'><data:comment.body/></span>
<b:else/>
<p><data:comment.body/></p>
</b:if>
</dd>

இந்த
ஏழு வரிகளுக்குப் பிறகு, இந்தக் script-டை copy-paste செய்யுங்கள்.

</b:if>

===================================================================


template-டை save செய்யுங்கள்.

===================================================================





இப்போது உங்கள் (author) கமெண்ட் தனியாகத் தெரியும்.

===================================================================

comment-டில் background நிறம் மாற்ற வேண்டும் என்றால், நிறங்களின் code அறிய இந்த லிங்கில் பாருங்கள். உங்களுக்கு வேண்டிய நிறங்களின் code-டை மாற்றி அமைத்து உங்கள் விருப்பம் போல வடிவமையுங்கள்.

.comment-body-author {
background: #F5EDE3; /* Background color*/
color: #000000; /* Text color*/

உங்கள் கமெண்ட்டுக்குப் பின்னால் ஏதாவது படம் வர வேண்டும் என்றால் நிறத்துக்கான code-துக்குப் பதில் url-லைக் கொடுக்கவும், இப்படி --

background: url(http://DIRECT_LINK_OF_THE_IMAGE.jpg) ;



=====

.

Tuesday, 8 September 2009

கூகுள் வழங்கும் தமிழில் செய்திகள்!

கூகுள் தொகுத்து வழங்கும் அண்மை செய்திகளை, அதுவும் தமிழில் நமது வலைத்தளத்தில் பெற எளிய வழி இது. முதலில் லேவுட் பகுதிக்கு சென்று add gadget -ஐ க்ளிக் செய்க. பார்க்க படம்.


அதில் வட்டமிட்டிருப்பதில் உள்ள + குறியை க்ளிக் செய்க. கீழே காணும் படம் தோன்றும்.
அதில் title என்பதில் செய்திகள் என்று கொடுக்கவும். Search Expression என்பதில் தோன்றும் எழுத்தை அழித்துவிட்டு உங்களுக்கு தேவையான செய்திகளுக்கான தலைப்பை- அதாவது அரசியல், சினிமா, விளையாட்டு, இலக்கியம் என்பது மாதிரி உங்களுக்கு தேவையான தலைப்பை தமிழிலேயே அங்கு டைப் செய்யுங்கள். ஒவ்வொன்றுக்கும் இடையில் கமா (,) இட மறக்காதீர்கள். அதிகபட்சம் மூன்று தலைப்பு இடுங்களேன்.



பின்பு சேவ் செய்திடுங்கள். உங்கள் வலைத்தளத்தில் இப்போது சுடச்சுட செய்திகள் தானியங்கியாக வந்துவிடும்.

அல்லது சம்பத் குமார் தமிழ் வெப் சொல்லியிருப்பது போலவும் செய்யலாம்.