Monday, 10 October, 2011

துயில்' நாவல் குறித்த கலந்துரையாடல்

எஸ். ராமகிருஷ்ணனின் "துயில்' நாவல் குறித்த கலந்துரையாடலுக்கான (8.10.2011 மாலை நேர) நிகழ்ச்சி ஏற்பாடுகளை டிஸ்கவரி புக் பேலஸின் உரிமையாளர் திரு.வேடியப்பன் செய்திருந்தார். முனைவர் இராம. குருநாதன் அவர்கள் தலைமையில் மற்றும் கூத்துப்பட்டறைச் சேர்ந்த தம்பிச்சோழன் சிறப்புரையாற்றுகிறார் என்ற தகவல் கிடைத்தது.

கொஞ்சம் தாமதமாகத்தான் சென்றேன். நான் சென்றபோது தம்பிச்சோழன் நாவல் பற்றி பேசிக்கொண்டிருந்தார். முடியும் தருவாயில் சென்றேன். கூட்டம் அதிகமாகயிருந்ததால் வசதியாக நிற்பதற்கு இடம்தேடுவதற்குள் அவர் பேசிமுடித்திருந்தார். அடுத்து எஸ்.ரா பேசினார். அவர் பேசியதன் முழு விவரத்திற்கு இங்கே சொடுக்கவும். http://www.tv.udanz.com

ரசித்த துளிகளில் என் ஞாபகத்தில் இருந்தவை மட்டும் இங்கே....

துயில் நாவலில் வரும் தெக்கூடு எனும் ஊர் உண்மையில் இல்லவே இல்லையாம். முழுக்க முழுக்க எஸ்.ரா.வின் கற்பனையாம். இதை அவர் குறிப்பிடும்போது அனைவரும் ஆச்சரியமாய் ரசித்தனர்.

துயில்- என்றால் தூக்கம். மனிதனுக்கு தூக்கம் ரொம்ப முக்கியம். அது சரியில்லாததால்தான் பெரும்பாலான குறைபாடுகள் வருகிறது (அதை குறைபாடுகள் என்றுதான் சொல்ல வேண்டும். நோய் என்று கூறக்கூடாது) என்றார். கிராமத்து பிள்ளைகள் எல்லாம் நன்றாக ஓடியாடி விளையாண்டு நன்றாக தூங்கும். ஆனால் நகரத்துப் பிள்ளைகளை பெற்றோர்கள் தூங்கு தூங்கு என்று சொல்- அவர்களே டயர்டாகி தூங்கிவிடுவார்கள். பெற்றோர்கள் தூங்கிவிட்ட பிறகு இதற்கு முழித்திருந்து என்ன செய்யப்போகிறோம் என்று நினைத்து பின்பு குழந்தைகளும் தூங்கிவிடும் என்றார்.

ரு மருத்துவமனைக்கு சென்றிருந்தாராம். அந்த மருத்துவ மனையில் வயதான ஒருவருக்கு மருத்துவர் நன்கு விசாரித்துவிட்டு குறிப்பேட்டில் எழுதிவிட்டு சென்றாராம். அவர் சென்றபிறகு எஸ்.ராவிடம் அந்த பெரியவர், "என் மகன்தான் டாக்டர். நல்லா கவனிச்சுக்கிறான். ஆனால் என்னை கையைப் பிடித்து விசாரிக்க மாட்டேங்கிறான்'' என்றவாரு எஸ்.ராவின் கையை பிடித்துக் கொண்டாராம். வயதானவர்கள் வசதி வாய்ப்புகளைவிட தங்களை வாஞ்சையுடன் கவனிக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அவர்கள் கையை கொஞ்ச நேரம் பிடித்திருந்தாலே அவர்கள் ரொம்பவும் மகிழ்வார்கள் என்றார்.
விஞ்ஞானம் வளர்ந்திருக்கும் இந்நாளில் உலகமே சுருங்கிவிட்டது. ஆனாலும் மருத்துவத்துறையில் மட்டும் தேக்கமடைந்திருப்பதாக வருத்தப்பட்டார். சென்னையில் ஒரு மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்ளும் ஒருவர் வேலை விசயமாக மதுரைக்கு செல்ல நேர்ந்திருக்கும்போது அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டால், அங்கிருக்கும் மருத்தவமனையிலும் (சென்னையில் எடுத்ததுபோலவே) அனைத்து டெஸ்ட்டுகளும் எடுக்க சொல்வார்கள். நெட்வொர்க் மூலம் அனைத்து மருத்துவமனைகளும் ஒருங்கிணைக்கப் பட்டிருந்தால் இந்த செலவுகள் மிச்சம்தானே என்றார். அவர்களின் சம்பாத்தியம் போய்விடும் என்பதால் இதை யாரும் செய்வதில்லை என்று வருத்தப்பட்டார்.

முன்பெல்லாம் மருத்துவரின் வீடும் மருத்துவம் செய்யுமிடமும் ஒன்றாக இருந்தது. எப்பொழுது வேண்டுமானாலும் கதவைத் தட்டி சிகிச்சை செய்துகொள்ள முடியும். அந்த காலத்தில் மருத்துவம் என்பது சேவையாக இருந்தது. ஆனால் இப்பொழுது அதை தொழிலாக்கி விட்டதால் மருத்துவமனை என்று தனியே கட்டிவிட்டார்கள். எங்கள் குடும்பமே மருத்துவ குடும்பம்தான். என் சகோதரன் வேட்டி சட்டையில்தான் எப்பொழுதும் இருப்பார். அவர் டாக்டர்தானா என்றுகூட பலரும் சந்தேகிப்பார்கள். மருந்து சீட்டையும் தமிழில்தான் எழுதுவார் என்று கூறினார். ஆச்சரியமும் அதிர்ச்சியும்தான் வந்திருந்தவர்களின் முகத்தில் தெரிந்தது.

சித்தமருத்துவர்கள்கூட தங்களின் தொழில் ரகசியங்களை வெளியில் சொல்வதில்லை. அவர்களின் குழந்தைகளுக்குத்தான் சொல்லிக் கொடுப்பார்கள். அந்தக் குழந்தைகளுக்கு அத்துறையில் ஈடுபாடு இல்லையென்றால் அந்த ரகசியங்கள் அவரோடு அழிந்து போய்விடும். இப்படித்தான் பல ரகசியங்கள் அழிந்துபோய்விட்டதாக வருத்தம் தெரிவித்தார்.

துயில் நாவலில் சில இடங்களில் எழுத்துப்பிழைகள் இருப்பதாக சொன்னபோது-
இருக்கலாம். ஏனெனில் எழுதிய நானே படித்தால் எழுத்துப்பிழைகள் தெரியாது. வெளிநாடுகளில் பிழைதிருத்த என அனைத்து துறைபற்றியும் தெரிந்தவர்கள் இருப்பார்கள். கண்டெட்-டை (உள்ளடக்கம்) திருத்த ஒருவர். பாராகிராப் (பத்தியமைப்பு) பார்ப்பதற்கு ஒருவர் என்றிருப்பார்கள். பின்பு பதிப்பகத்தார் படித்து, மாதிரி காப்பி ரெடி செய்து எழுத்தாளருக்கு அனுப்புவார்கள். எழுத்தாளர் பார்த்துவிட்டு சரி என்றதும்தான் அச்சுக்கு அனுப்புவார்கள் என்றார். ஆனால் தமிழ்நாட்டில் அனைத்து துறை அறிந்த பிழைதிருத்துநர்கள் இல்லை. அதற்கான தேவை இருக்கிறது என்றார்.

11 comments:

குடந்தை அன்புமணி said...

எஸ். ராமகிருஷ்ணன் உடனான கலந்துரையாடலை கேட்டும் மகிழலாம்... அதற்கு டி.வி.உடான்ஸ்.காம் செல்லவும்.

'பரிவை' சே.குமார் said...

நல்ல பகிர்வு.

Cable சங்கர் said...

நன்றி நண்பரே..

SURYAJEEVA said...

நன்றி நண்பரே..

குறையொன்றுமில்லை. said...

நல்ல பதிவு வாய்ப்பு கிடைத்தவர்கள் அதிர்ஷ்ட சாலிகள்.

MANO நாஞ்சில் மனோ said...

மிக்க நன்றி நண்பரே...

SURYAJEEVA said...

jeevansure@gmail.com
9489842624

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்.
http://rathnavel-natarajan.blogspot.com/2011/10/blog-post.html

குடந்தை அன்புமணி said...

தங்கள் வருகைக்கு நன்றி...
சே.குமார்
சங்கர நாராயணன் @ கேபிள் சங்கர்
சூரிய ஜீவா

குடந்தை அன்புமணி said...

//Lakshmi said...

நல்ல பதிவு வாய்ப்பு கிடைத்தவர்கள் அதிர்ஷ்ட சாலிகள். //

உங்களுக்கும் அந்த வாய்ப்பை ஏற்படுத்தியிருக்கிறார் நம்ம கேபிள் சங்கர். அவர் நடத்தும் http://www.tv.udanz.com தளத்தில் சென்று க்ளிக் கேட்கலாமே...

குடந்தை அன்புமணி said...

நன்றி...
நாஞ்சில் மனோ
ரத்னவேல்

Post a comment

உங்கள் கருத்துக்கள் எனக்கு ஊக்கமளிக்கும். மேம்படுத்தும். தயவு செய்து முகம் சுளிக்கத்தக்க பின்னூட்டங்களை தவிருங்கள்.