Sunday, 23 August, 2009

வலைத்தளத்தில் கவிதை எழுத நான்பட்டபாடு!

முதன் முதலில் வலைப்பதிவர் பட்டறையில் கலந்துகொண்டபோதுதான் இப்படி நமக்கே நமக்கென்று ஒரு வலைப்பதிவை தொடங்கலாம், நமது எண்ணங்களை, கருத்துக்களை, படைப்புக்களை உலகம் முழுவதும் கொண்டு செல்ல, நட்பை வளர்க்க மிகப்பெரிய வாய்ப்புண்டு என்று உணர்ந்தேன்.

எனக்கென்று ஒரு வலைப்பதிவை உருவாக்கியவுடன் முதல் இடுகை கவிதையாக இருக்க வேண்டுமென்று நினைத்தேன். அதன்படி கவிதையை நோட்பேடில் டைப் செய்து காப்பி செய்து எடுத்துக்கொண்டு இணைய மையத்திற்கு சென்றேன். இடுகை இட்டபின் அது கவிதையாக இல்லாமல் பாரா கிராபாகவே எடுத்துக்கொண்டது.

சரி என்று தேவைப்படும் இடத்தில் கர்சரை வைத்து என்டர் தட்டினேன். ஒரு வரிக்கும் அடுத்த வரிக்கும் இடையே இடைவெளி அதிகமாகி கவிதை வெளியிடும் என் ஆசையை தடுத்தது. நானும் பலமுறை முயற்சி செய்தேன். முடியவில்லை. வலைத்தளத்திற்கு புதியவன் என்பதால் தெரிந்தவர்கள் அதிகமில்லை. எனக்கு தெரிந்த சில நண்பர்களிடம் கேட்டதற்கு எங்களுக்கு அப்படி எதுவும் ஆகவில்லை என்றார்கள். அப்ப இந்த கொடுமை நமக்கு மட்டும்தானா? இதை எப்படி தீர்ப்பது என்ற குழப்பத்திலேயே இருந்தேன்.

இதற்கிடையில் பதிவர் சந்திப்பு (டிசம்பர்27, 2008) தி.நகர். நேடசன் பூங்காவில் நடைபெறும் என்ற அறிவிப்பு ஆதிசாவின் வலைப்பதிவின் மூலம் தெரிந்து கொண்டு அங்கு சென்றேன். நான் செல்லும் முன்பே சந்திப்பு நிகழ்ச்சி ஆரம்பித்துவிட்டதால் என்னை அறிமுகப்படுத்திக்கொள்ள முடியாமல் அமைதியாக நிகழ்ச்சிகளை கவனித்துக் கொண்டிருந்தேன்.

என்னருகே அமர்ந்திருந்த ஒருவர்(கார்க்கி என்று பின்பு விசாரித்து தெரிந்து கொண்டேன்) என்னிடம் மெல்ல பேச்சு கொடுத்தார். அவரிடம் என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, அவரிடம் என் பிரச்சனையை சொன்னேன். அவர் 'தமிழ் எழுதி' கொண்டு எழுதினால் இந்தப்பிரச்சனை வராது என்றார்.

சரி, ஒரு புதிய ஐடியா கிடைத்திருக்கிறது என்று சந்தோசமாக சென்றேன். ஆனால் எனக்கு இதிலும் தோல்வியே! சரி இனியும் பொறுப்பதில் அர்த்தமில்லை நாமே நோண்டிப்பார்த்துவிடுவது என்று முடிவெடுத்தேன். இடுகைப்பெட்டியில் இருக்கும் html திருத்து என்றதன் மேல் கிளிக் செய்தேன். ஏதோ மாற்றம் தெரிந்தது. பிறகு கவிதையில் தேவைப்பட்ட இடத்தில் வைத்து என்டர் தட்ட என் முயற்சி வெற்றி பெற்றது.

இது ஒரு மீள்பதிவு. (இலக்கியாவில் வெளியிடப்பட்டது.)

தற்போது NHM ரைட்டர் மூலம் நேரிடையாகவே கவிதைகள் டைப் செய்து வெளியிடுகிறேன். எந்தப் பிரச்சினையும் இல்லை.

3 comments:

ஆ.ஞானசேகரன் said...

ம்ம்ம் நல்லது..

Btc Guider said...

//நமது எண்ணங்களை, கருத்துக்களை, படைப்புக்களை உலகம் முழுவதும் கொண்டு செல்ல, நட்பை வளர்க்க மிகப்பெரிய வாய்ப்புண்டு என்று உணர்ந்தேன்.//
நாம் சொல்ல நினைத்த்ட எந்த விசயத்தையும் சென்சார் இல்லாமல் சக வலைப்பதிவாளர்களிடம் எடுத்துச் சொல்ல நமக்கு கிடைத்த அருமையான வாய்ப்புதான் இந்த வலைப்பூ என்ற களம்.
மனதில் நினைத்ததை எழுதுங்கள் அவை நாலு பேருக்கு பயனளிக்க வேண்டும் என்ற கொள்க்கையும் வைத்துக் கொள்ளுங்கள் வலைப்பதிவில் கூடிய சீக்கிரம் உங்களுக்கு என்ற ஒரு வட்டம் கண்டிப்பாக உருவாகும்.

Unknown said...

இதை ஏற்கனவே படித்தாகிவிட்டது அங்கேயே!

இருப்பினும் அதே உணர்வுடன் படிக்க இயன்றது ...

Post a comment

உங்கள் கருத்துக்கள் எனக்கு ஊக்கமளிக்கும். மேம்படுத்தும். தயவு செய்து முகம் சுளிக்கத்தக்க பின்னூட்டங்களை தவிருங்கள்.