செப்டம்பர் 4ந்தேதி யூத் பதிவர் சந்திப்பு என்றதும் நிச்சயம் கலந்துகொள்ள வேண்டும் (இல்லேன்னா நான் யூத் இல்லைன்னு நினைச்சிடுவாங்களோன்னு) உடனே முடிவெடுத்தேன். அருமை தங்கமணிக்கிட்ட அனுமதி வாங்கிட்டு (ஞாயிற்றுக்கிழமை ஒருநாள்தான் லீவு. அன்னைக்கும் வீட்டுல உள்ளவங்களோட இல்லேன்னா எப்படி? என்று முணுமுணுத்தவளை தாஜா செய்துவிட்டு) கிளம்பினேன்.
கவுண்டமணி பேன்ஸ் வலைத்தளத்தில் இருந்த விஐபி. நம்பருக்கு போன் செய்து என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். இறக்குமிடம் பற்றி விசாரிப்பு... (அடிக்கடி பதிவர் சந்திப்பு டிஸ்கவரி புக் பேலஸில் நடந்தாலும் நான் கலந்து கொள்வது இது முதல்முறை அதான் முகவரி விசாரிப்பு... காரணம்... அதான் மேலே விரிவா எழுதியிருக்கேனே...)
ஐந்தரை மணியிருக்கும்போது கே. கே. நகரில் இருந்தேன். சற்று நேர தடுமாற்றத்திற்கு பிறகு பாண்டிச்சேரி விருந்தினர் மாளிகை கண்ணில் பட்டது. அருகி-ருந்த டீக்கடையில் நின்றவர்கள் எல்லாரும் பதிவர்களாகவே தெரிந்தார்கள். எல்லாம் பிரமை...
உத்தேசமாக சாலையில் நடந்தேன்... சில அடிதூரம் நடந்த பின்பு கண்டேன்... டிஸ்கவரி புக் பேலஸை. வாசலில் தண்ணீர் பாட்டில்களுடன் (நிச்சயமாங்க அது தண்ணீர் பாட்டில்தான்) இரண்டுபேர் நின்று கொண்டிருந்தார்கள். அவர்களிடம் என்னை அறிமுகம் செய்ய... அவர்கள் சிவகுமார் என்றும் கருண் என்றும் அறிமுகப்படுத்திக் கொண்டார். அவர்களுடன் மாடிக்கு சென்றேன். மாடியில் பிலாசபி பிரபாகரன், தம்பி கூர்மதி, அஞ்சா சிங்கம், நா. மணிவண்ணன் மற்றும் இன்னும் சிலர் பெயர் ஞாபகத்தில் இல்லை. அவர்களனைவருக்கும் பதிவர் தென்றலை அறிமுகப்படுத்தினேன். அவர்களின் முகத்தில் மகிழ்ச்சி பொங்கியது. (பொங்கியது?)
நிகழ்ச்சி நடக்கும் அறைக்குள் சென்றோம். அங்கு ஏற்கெனவே அமர்ந்திருந்த சென்னைப்பித்தன், தமிழ் சிபியூ ராஜ்குமாரை (இருவரையும்தான் பார்த்ததும் அடையாளம் தெரிந்தது. மற்றவர்கள் எல்லாம் தங்களின் பழைய படங்களைத்தான் வலைத்தளத்தில் வெளியிட்டிருக்கிறார்கள். உஷாராக இருங்கள்)
ஒருவரை பார்த்து நீங்கள் யார்? என்று கேட்டேன். சரியாப்போச்சு என்றார். பக்கத்தி-ருப்பவர் அவர்தான் ஷர்புதீன் என்றார். (யூத் பதிவர் சந்திப்பு என்றதும் மீசையெல்லாம் எடுத்துவிட்டு வந்திருந்தார்.) கவிதைவீதி சௌந்தர் பதிவர் தென்றல் நல்லாருக்கு என்றார். கருண் உங்களை எங்கேயோ பார்த்தமாதிரியிருக்கே? என்றார். எங்கே படிச்சீங்க, எந்த கல்லூரி என்று விசாரித்தார். கடைசிவரை எங்கு பார்த்தார் என்று அவருக்கு தெரியவில்லை. எனக்கும் ஞாபகத்தில் இல்லை.
சிறிது நேரத்தில் ஒவ்வொருவராக வர ஆரம்பித்தனர். கேபிள் சங்கர் உள்ளே வந்ததும் ஆட்டம் ஆரம்பித்தது. வந்திருந்தவர்களை எல்லாரையும் திரும்பி பார்த்தேன். எனக்கு தெரிந்த தலைகள் என்று பார்த்தால்... கேபிள் சங்கர், லக்கி, ஜாக்கி சேகர்... மற்றவர்கள் அனைவரும் புதிய முகமாகவே தெரிந்தார்கள்.
டிஸ்கவரி புக் பேலஸ் உரிமையாளர் வந்து பார்த்துவிட்டு சென்றார். அவருக்கும் பதிவர் தென்றல் கொடுத்தேன். பார்த்துவிட்டு நல்லாருக்கே... நம்ம கடை விளம்பரமும் போட்டுடலாம்... போகும்போது என்னைப் பாருங்க... என்றார். (அய்... ஒரே கல்-லே ரெண்டு மாங்கா... பதிவர் சந்திப்பு + விளம்பரம்)
பதிவர்கள் தங்களை அறிமுகப்படுத்திக்கொள்ளும் நிகழ்ச்சி நடந்தேறியது. இந்த பதிவர் சந்திப்பில் சில வாசகர்களும் கலந்துகொண்டார்கள். அவர்களை கேபிளார் அய்... வாசகர்... என்று கலாய்த்துக்கொண்டிருந்தார். அந்த வாசகர் வலைத்தளம் தொடங்க ஆர்வம் வந்துவிட்டதாக சொல்ல... வடை போச்சே... என்றார்.
மாஸ் (நிஜமாலுமே அவர்தான் யூத்... கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கிறார்) என்பவர் ஜாக்கியின் வலைத்தளம்தான் முதலில் படித்தது, ஜாக்கிதான் எனக்கு முதல் பின்னூட்டம் இட்டது... என்று வார்த்தைக்கு வார்த்தை ஜாக்கி புராணம் பாடினார். இதுக்கு எவ்வளவு செலவாச்சு என்று கேபிளார் கலாய்த்தார்.
ஒவ்வொருவரின் அறிமுகத்துக்கு பிறகு, பதிவர்களுக்கு டிப்ஸ் வழங்க வந்தார் லக்கி. பதிவுகளின் நீளத்தை குறைத்து சுருக்கமாக (யாருக்காக.... இது யாருக்காக....) இடுகையிடவும், தலைப்பை வசீகரமாக வைக்கும்படியும் வற்புறுத்தினார். தலைப்பு வைப்பதில் எழுத்தாளர் சுஜாதாவை பின்பற்றும்படி கூறினார். இடுகையிட எதுவும் தோன்றவில்லை என்று சொல்வதை ஏற்பதற்கில்லை என்றார். செய்தித்தாளை படிங்க அதி-ருந்து உங்களுக்கு தோன்றுவதை எழுதுங்க என்றார். (ஆனா, செய்தித்தாளை காப்பி அடிக்காதீங்க இது நமதுகுரல்)
பின்பு உருப்படாதது நரேன் பேசினார். எதைப்பற்றி வேண்டுமானாலும் எழுதுங்க. எதிர்கருத்தை பற்றி கவலைப்படாமல் எழுதுங்க என்றார். பின்னூட்டத்திற்கு பயந்து பலர் எழுதாமல் இருந்துவிடுவதாக கூறினார்.
வாசகர் ஒருவர் கருத்தான இடுகைகள் இடும் பதிவர்கள் மொக்கைகளையும் இடுகிறார்கள். இதை தவிர்க்கலாம் என்றார். (மொக்கையை தவிர்த்தால் பல பதிவர்கள் காணாமல் போய்விடுவார்களே...)
கேபிளார் அவரின் அனுபவத்தை கூறி கேட்டால் கிடைக்கும் இயக்கம் ஆரம்பித்திருப்பது பற்றி தெரிவித்தார். இது பற்றி பின்பு சுரேகாவும் பகிர்ந்துகொண்டார்.
ஜாக்கியும், சாமிதுரை இன்னும் பலர் தனது அனுபவங்களை பகிர்ந்தனர்.
இந்த பதிவர் சந்திப்பு பற்றி எனது ஞாபகத்தில் உள்ளவற்றை இங்கே பகிர்ந்திருக்கிறேன். மற்றவை நம்ம பிலாசபி பிராபாகரன் வலைத்தளத்தில் வரும் திங்கள் அல்லது செவ்வாய் எதிர்பார்க்கலாம்- போட்டோ வும்தான்! வேறு யாரும் போட்டோ எடுத்திருந்தா எனது மெயிலுக்கு விரைந்து அனுப்பி வையுங்க... பதிவர் தென்ற-ல் வெளியிடலாம்.
பணி (Pani) - மலையாள சினிமா
15 hours ago
14 comments:
//மொக்கைகளையும் இடுகிறார்கள். இதை தவிர்க்கலாம் என்றார். (மொக்கையை தவிர்த்தால் பல பதிவர்கள் காணாமல் போய்விடுவார்களே...)//
இது என்னைய குறிப்பிட்டு சொல்லலேல????
பதிவர் சந்திப்பு நல்லா சொல்லி இருக்கீங்க பதிவர் தென்றல் புக் ரொம்ப நல்லா இருக்கு. நன்றி
//இந்திரா said...
//மொக்கைகளையும் இடுகிறார்கள். இதை தவிர்க்கலாம் என்றார். (மொக்கையை தவிர்த்தால் பல பதிவர்கள் காணாமல் போய்விடுவார்களே...)//
இது என்னைய குறிப்பிட்டு சொல்லலேல????//
அற்புதமான விசயங்களுடன் நகைச்சுவையாக இடுகையிடும் உங்களைப்போய் அப்படி நினைக்கலாமுங்களா...
//Lakshmi said...
பதிவர் சந்திப்பு நல்லா சொல்லி இருக்கீங்க பதிவர் தென்றல் புக் ரொம்ப நல்லா இருக்கு. நன்றி//
மிக்க நன்றி... படைப்புகளை தேர்ந்தெடுத்தது மட்டுமே என்னுடைய வேலை. மற்றபடி பாராட்டுகள் அனைத்தும் படைப்பாளிகளுக்கே.....
தங்களது அனுபவம் தாங்கள் சொல்லும்பொழுதே அங்கே நானும் இருந்தது போல் ஒரு பிரம்மை
பகிர்வுக்கு நன்றி நண்பரே
//M.R said...
தங்களது அனுபவம் தாங்கள் சொல்லும்பொழுதே அங்கே நானும் இருந்தது போல் ஒரு பிரம்மை
பகிர்வுக்கு நன்றி நண்பரே//
தங்கள் வருகைக்கு நன்றி நண்பரே...
உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி!
உங்கள் பணிசிறக்க வாழ்த்துக்கள்!
என்ன ஞாபகம் இருக்குங்களா?
மன்னிக்கவும், அன்று பார்த்தவுடன் தங்களை என்னால் அடையாளம் காண இயலவில்லை. என் பெயரைச் சொல்லித் தாங்கள் அழைத்தது நான் எதிர்பார்த்திராத ஒன்று. நான் சரியாக அடையாளம் கண்டு கொண்டது பிலாசபி பிரபாகரனைத்தான். பதிவர் தென்றல் இதழுக்கு விரைவில் சந்தாதாரர் ஆகிக்கொள்கிறேன்(இந்த மாசம் ரொம்ப டைட் பாஸ்...)
எல்லோரையும் நேரில் சந்தித்த உணர்வை ஏற்படுத்தினீர்கள் நண்பா..
பதிவர் சந்திப்பை பற்றி அழகாக விவரித்திருக்கிறீர்கள். பகிர்வுக்கு நன்றி.
\\கோகுல் said...
உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி!
உங்கள் பணிசிறக்க வாழ்த்துக்கள்!
என்ன ஞாபகம் இருக்குங்களா?\\
ஞாபம் இருக்கு... (இப்போ உங்க படத்தை பார்த்ததும் ஞாபகம் வந்திடுச்சு...) மிகவும் மகிழ்ச்சி. தொடர்ந்திருப்போம்...
\\ந.ர.செ. ராஜ்குமார் said...
மன்னிக்கவும், அன்று பார்த்தவுடன் தங்களை என்னால் அடையாளம் காண இயலவில்லை. என் பெயரைச் சொல்லித் தாங்கள் அழைத்தது நான் எதிர்பார்த்திராத ஒன்று. நான் சரியாக அடையாளம் கண்டு கொண்டது பிலாசபி பிரபாகரனைத்தான். பதிவர் தென்றல் இதழுக்கு விரைவில் சந்தாதாரர் ஆகிக்கொள்கிறேன்(இந்த மாசம் ரொம்ப டைட் பாஸ்...)\\
பரவாயில்லை நண்பா... தங்களுக்கு சந்தர்ப்பம் வாய்க்கும்போது சந்தா செலுத்துங்கள்...
மிக்க நன்றி நண்பர்களே...
முனைவர்.இரா.குணசீலன்
N.H.பிரசாத்
அன்பு உறவே நலமா?
நீண்ட நாளையின் பின் இணைவதில் மகிழ்ச்சி.
பதிவர் சந்திப்பின் பகிர்வு நல்லாயிருக்குங்க.நல்ல முயற்சி.உங்கள் எழுத்து நடை யதார்த்தமாக நேரில் நாமும் கலந்தது போல் இருக்கு.பதிவுக்கு அன்புடன் பாராட்டுக்கள்.
Post a Comment
உங்கள் கருத்துக்கள் எனக்கு ஊக்கமளிக்கும். மேம்படுத்தும். தயவு செய்து முகம் சுளிக்கத்தக்க பின்னூட்டங்களை தவிருங்கள்.