Monday 24 August, 2009

உங்கள் நண்பரின் பதிவை தவற விடுபவரா நீங்கள்?

'கற்றது கை மண்ணளவு' அப்படின்னு சொல்வாங்க. வலைத்தளம் ஆரம்பித்த புதிதில் கண்ணைக்கட்டி காற்றில் விட்டது போலிருந்தது. வலைத்தளம் ஆரம்பிக்கவே நிறைய பயிற்சிகள் செய்தேன் என்பது வேறு விசயம். பின்பு பலரின் வலைத்தளங்களுக்கு சென்று பல புதிய விடயங்களை கற்றுக் கொண்டேன். அதுபோல் எனக்கு தெரிந்ததை இங்கு உங்களுக்கு சொல்கிறேன். இது பலருக்கும் தெரிந்திருக்கலாம். அவர்களுக்காக அல்ல... என்னைப்போல் அறிந்துகொள்ள ஆர்வமுள்ள, ஆனால் வழி தெரியாதவர்களுக்காகவே இப்பதிவு!

விரும்பி வாசிக்கும் சில வலைத்தளத்திற்கு நீ்ங்கள் பாலோவராகவும் ஆகியிருப்பீர்கள். அப்படி ஆகியிருப்பவர்கள், அவர்களின் வலைத்தளத்தில் புதிய பதிவு போடுவதை எப்படி அறிவீர்கள்?

அவரின் வலைத்தளத்திற்கு சென்று பார்போம்! இதென்ன புதுசா கேட்கிறே?என்று என்னை முறைக்காதீர்கள்!அவர்களின் வலைதளத்திற்கு சென்றுதான் பார்ப்பேன் என்பது உங்கள் பதிலாக இருக்குமென்றால், இனி அந்த வழக்கத்தை மாற்றிக் கொள்ளுங்கள். தினந்தோறும் உங்கள் வலைத்தளத்திற்கு தவறாது வருகை புரிவீர்கள் தானே அப்புறமென்ன!உங்கள் வலைத்திலிருந்தே (அங்கு சென்று பார்க்காமலேயே) புதிய பதிவு போடப்பட்டிருக்கிறதா? என்பைத அறிய எளிய வழி உள்ளது.

முதலில் உங்கள் வலைத்தளத்திற்கு சென்று, டேஸ்போர்டை திறந்துகொள்ளுங்கள். ஆட்கெஜட் பகுதியை கிளிக் செய்க. அதில், பிளாக் லிஸ்ட் என்பதில் க்ளிக் செய்க.
தோன்றும் பகுதியில் தலைப்பில் உங்களுக்கு விருப்பமான தலைப்பை (உ.தா= நண்பர்களின் வலைத்தளம்) கொடுத்து, அதில் கேட்கப்பட்டிருப்பதில் உங்களுக்கு விருப்பமான ஆப்சனை தேர்ந்தெடுத்துக்கொண்டு, ஆட்லிஸ்ட் என்பதை க்ளிக் செய்யு்ஙகள்.
கீழே உள்ளதுபோல் தோன்றும். அதில் நான் பின்தொடரும் அனைத்தும் என்பதை க்ளிக் செய்யுங்கள்.

பின்பு ஆட் செய்யுங்கள். அதன்பிறகு கேட்கும் கேள்விகள் உங்கள் விருப்பத்திற்கு மாற்றம் செய்து கொள்ளுங்கள்.

பிறகு சேவ் செய்க. பிறகு லேவுட் பகுதி தோன்றும். அங்கு சேவ் செய்துகொண்டு, உங்கள் வலைதளத்திற்கு சென்று பாருங்கள்.

இப்போது உங்கள் விருப்பமானவர்களின் வலைதளத்ததில் ஒரு புதிய பதிவு இடப்பட்டால் உங்கள் வலைத்தளத்திலிருந்து பார்த்து, உடன் அந்த தளத்தை க்ளிக் செய்து உடன் பின்னூட்டமிட்டு கலக்கலாம். தவறவிடமாட்டீர்கள், இனி!

உங்கள் நண்பரும் மகிழ்வார்!

இதற்கு பின்னூட்டமிட மறந்துவிடாதீர்கள்!





இந்த இடுகையும் இலக்கியாவிலிருந்து உங்களுக்காக மீள் பதிவிடப்பட்டது.

எமது அடுத்த இடுகை- பாலோவர் இல்லாத வலைப்பக்கங்களிலும் பாலோவர் ஆகலாம்.

6 comments:

ஊர்சுற்றி said...

இவ்ளோ தூரம் கஷ்டப்படவேண்டாம்,
கூகிள் ரீடர் இருக்கும்போது.

நீங்க பின்தொடர்கிற எல்லா வலைப்பூக்களையும் தனி லிஸ்ட்டாகவும் அந்தந்த வலைப்பூக்களின் எல்லா இடுகைகளையும் காட்டிவிடும். அப்புறம் நீங்க புதுசா தனித்தனியா போல்டர் உருவாக்கி அதில நீங்க விருப்பப்படுற வலைப்பூக்களை இணைச்சிக்கலாம்(Add a subscription).
நீங்க மேல குறிப்பிட்டிருக்கிறது வலைப்பூவை அலங்கரிக்க வேண்டுமானால் பயன்படும்.

குடந்தை அன்புமணி said...

//ஊர்சுற்றி said...
இவ்ளோ தூரம் கஷ்டப்படவேண்டாம்,
கூகிள் ரீடர் இருக்கும்போது.

நீங்க பின்தொடர்கிற எல்லா வலைப்பூக்களையும் தனி லிஸ்ட்டாகவும் அந்தந்த வலைப்பூக்களின் எல்லா இடுகைகளையும் காட்டிவிடும். அப்புறம் நீங்க புதுசா தனித்தனியா போல்டர் உருவாக்கி அதில நீங்க விருப்பப்படுற வலைப்பூக்களை இணைச்சிக்கலாம்(Add a subscription).
நீங்க மேல குறிப்பிட்டிருக்கிறது வலைப்பூவை அலங்கரிக்க வேண்டுமானால் பயன்படும்.//

நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் இத்தகைய வலைபதிவு பட்டியல் மூலம் பல பதிவர்கள் பல புதிய பதிவர்களையும் கண்டு கொள்கிறார்கள் என்பதும் ஒரு நன்மை.

நட்புடன் ஜமால் said...

உண்மை தான் நண்பரே

உங்கள் வலையில் எங்கள் வலை முகவரி இருந்தால் உங்கள் நண்பர் கூட எங்களை பார்க்க வருவார்கள் தான்

(just for example)

Admin said...

நல்ல இடுகை நன்றிகள்

ஆ.ஞானசேகரன் said...

நல்ல இடுகை மிக்க நன்றி

குப்பன்.யாஹூ said...

useful post. thanks.

Post a Comment

உங்கள் கருத்துக்கள் எனக்கு ஊக்கமளிக்கும். மேம்படுத்தும். தயவு செய்து முகம் சுளிக்கத்தக்க பின்னூட்டங்களை தவிருங்கள்.