Wednesday 26 August, 2009

சில பிளாக்குகளை படிக்க முடியவில்லையே ஏன்?

கீழே உள்ள வலைத்தளத்தின் படத்தைப் பாருங்கள். எழுத்துருக்கள் படிக்க முடியாமல் காட்சியளிக்கிறதா?


இதுபோல் சில வலைத்தளத்தை சில பிரவுசர்களில் படிக்க முடியாமல் இருக்கும். இதன்லேயே பல வலைத்தளங்களுக்கு சென்றுவிட்டு படிக்க முடியாததால் திரும்பி இருக்கிறேன். இதற்கு தீர்வு எதுவும் உண்டா என்று எனக்கு தெரிந்தவரையில் நோண்டிப் பார்த்தேன்.
சில வலைத்தளங்களில் கருத்துரைகளை (Comments) க்ளிக் செய்து ஓப்பன் ஆகும் விண்டோவில் அசல் இடுகையை காண்பி (Show Original Post) என்பதை க்ளிக் செய்து படிப்பேன். சில வலைத்தளங்களில் Settings-ல் Comments- பகுதியில் Embedded below post என்று தேர்வு செய்திருப்பார்கள். அதனால் மேற்சொன்ன முறையில் படிக்க முடியாது போய்விடுகிறது. அதே போல்தான் Pop-up window முறையை தேர்ந்தெடுத்திருந்தாலும் படிக்க முடியாது. எனவே Full page என்ற முறையை தேர்ந்தெடுங்கள்.
எனக்கு தெரிந்து மற்றொரு முறை... லேவுட் பகுதிக்கு செல்லுங்கள். Fonts and Colors என்ற ஆப்சனை க்ளிக் செய்யுங்கள். அதில் சைடில் தெரியும் பாக்ஸில் Text Font -ஐ க்ளிக் செய்தால் கீழே உள்ள படத்தைப் போல தொன்றும்.



அதில் நான் ‘டிக்’ செய்திருக்கும் Arial அல்லது Verdana என்பதை ‘டிக்’ செய்திடுங்கள். பின்பு சேவ் செய்திடுங்கள்.இப்போது அனைத்து ப்ரவுசர்களிலும் உங்கள் வலைத்தளத்தினை படிக்க முடியும்.

படித்துவிட்டு தங்கள் கருத்துக்களை மறக்காமல் பின்னூட்டம் இடுங்கள். தங்களுக்கு வேறு ஏதேனும் சந்தேகம் இருப்பினும் அதையும் தெரிவியுங்கள்.

17 comments:

வனம் said...

வணக்கம் அன்புமணி

நல்ல உபயோகமான பதிவு.
நானும் இதுமாதிரி அனுபவப்பட்டிருக்கின்றேன்

இராஜராஜன்

குடந்தை அன்புமணி said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழரே. தங்கள் அனுபவங்களையும் நாங்கள் பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். தகவல் மலரில் நீங்களும் எழுத விருப்பம் இருப்பின் தெரியப்படுத்துங்கள்.

நட்புடன் ஜமால் said...

நல்ல தகவலாக இருக்கே

மிக்க நன்றி நண்பரே

Admin said...

நல்ல தகவல் பகிர்வுக்கு நன்றிகள்

ஆ.ஞானசேகரன் said...

எனக்கு இந்த அனுபவம் வரவில்லை... பயனுள்ள இடுகைதான்

குடந்தை அன்புமணி said...

//நட்புடன் ஜமால் said...
நல்ல தகவலாக இருக்கே

மிக்க நன்றி நண்பரே//

நமக்குள் எதற்கு நன்றி...
பயன் இருந்தால் நலமே.

குடந்தை அன்புமணி said...

//சந்ரு said...
நல்ல தகவல் பகிர்வுக்கு நன்றிகள்//

தங்களின் தொடர் வருகை எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது தோழா.

குடந்தை அன்புமணி said...

//ஆ.ஞானசேகரன் said...
எனக்கு இந்த அனுபவம் வரவில்லை... பயனுள்ள இடுகைதான்//

உங்கள் இடுகையை Show Original Post - ஐ க்ளிக் செய்துதான் படிக்கிறேன். நண்பா... வலைத்தளத்தை சரி பாருங்கள்.

Vidhoosh said...

:) நல்ல பதிவுங்க. நானும் ஒரு தரம் செக் பண்ணிவிட்டேன்.

-வித்யா

துளசி கோபால் said...

இதுவரை இப்படி ஒரு பிரச்சனையைச் சந்திக்கலை.


ஆனாலும் சோதிச்சால் ஆச்சு.

நன்றி

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

பயனுள்ள பதிவு அன்பு!

இரவுப்பறவை said...

தகவலுக்கு நன்றி..

அமிர்தவர்ஷினி அம்மா said...

உபயோகமான இடுகை

பகிர்வுக்கு நன்றி

குடந்தை அன்புமணி said...

//தமிழ் said...
இந்த இணையத்தளத்தில் உங்களுக்கு ஒரு இன்பஅதிர்ச்சி காத்திருக்கிறது

இனையமுகவரி :
டெக்னாலஜி.காம்//

விருது கொடுத்து இன்ப அதிர்ச்சி வழங்கிய தங்களுக்குமிக்க நன்றி நண்பரே!

முனைவர் இரா.குணசீலன் said...

நல்ல யோசனை நண்பரே....

Radhakrishnan said...

அட, மிக்க நன்றி ஐயா. விரைவில் சரி செய்து விடுகிறேன். நீங்கள் ஒருமுறை அழைப்பு விடுத்தீர்கள், நன்றி.

Jaleela Kamal said...

எல்லோருக்கும் பயனுள்ள பதிவு.

Post a Comment

உங்கள் கருத்துக்கள் எனக்கு ஊக்கமளிக்கும். மேம்படுத்தும். தயவு செய்து முகம் சுளிக்கத்தக்க பின்னூட்டங்களை தவிருங்கள்.