Sunday 30 August, 2009

கூகுள் வழங்கும் லேபிள்- அறிந்ததும், அறியாததும்.


கூகுள் வழங்கும் லேபிள் என்பது நாம் எழுதும் இடுகைகளை ஒரு வரிசைபின் கீழ் (உ.தா- கவிதை, தொழில்நுட்பம், அனுபவம் என்று) வகைப்படுத்தி வைப்பதற்கு உதவுகிறது. புதிதாக நம் வலைத்தளத்திற்கு வருகை தருபவர்கள் லேபிளை பார்த்து, அவர்களுக்கு விருப்பமான தலைப்பை தேர்ந்தெடுத்து படிப்பார்கள் என்பது தெரிந்த விடயம்தான்.

வலைத்தளம் ஆரம்பித்த புதிதில் அதைப் பற்றி தெரியாமல் இடுகைப் பெட்டியில் எனக்குத் தோன்றிய தலைப்பெல்லாம் இட்டுவிட்டேன். பின்பு லேபிளின் பயன்பாடு பற்றி தெரிந்ததும் அந்த கெஜட்டை சேர்த்த பிறகுதான் நான் செய்த தவறுகள் தெரிய ஆரம்பித்தது. லேபிள் மிக நீண்டு தெரிந்தது. அதன் பிறகு பழைய இடுகைகளையெல்லாம் எடிட் பகுதிக்கு சென்று லேபிளை ஒரு குறிப்பிட்ட வரிசைக்குள் வருமாறு மாற்றிவிட்டேன். இப்போது பார்ப்பவர்களுக்கு கண்களை உறுத்தாமல் தெளிவாக இருக்கும்.

இப்படி மாற்றுவதன் மூலம் எந்தவித பாதிப்பும் உண்டாகாது. நீங்கள் இடுகைகளின் லேபிளை மாற்றும்போது தேதியை ஒன்றும் செய்யாமல் லேபிளை மட்டும் மாற்றிவிட்டு பப்ளிஷ் செய்தால் போதும்.நாம் முன்பு இடுகை இட்ட தேதிகளிலேயே வெளியாகும்.

புதிய இடுகைகள் இடும்போது இதை எந்த வரிசையின் கீழ் கொண்டு வரலாம் என்பதற்கு அந்த இடுகைப் பெட்டியின் அருகில் இருக்கும் Show all என்பதை க்ளிக் செய்து பார்த்துக் கொள்ளலாம்.


தமிழ்மணம் திரட்டி பல தலைப்புகளின் கீழ் நமது இடுகைகளை திரட்டுகிறது. என்றாலும் பெரும்பான்மையாக- நகைச்சுவை- மொக்கை/நையாண்டி, அரசியல்/சமூகம், அனுபவம்/நிகழ்வுகள், கவிதை/சிறுகதை, திரைப்படம்/விமர்சனம், சமையல்குறிப்பு/சமையல் போன்ற தலைப்புகள் இட்டால் முகப்பு பக்கத்தில் அதன் தலைப்புகளில் தெரியும். படிப்பவர்கள் எளிதில் தொடர்பு கொள்ள வசதியாகவும் இருக்கும்.



இந்த இடுகை உங்களுக்கு சிறிதளவேணும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன். தங்கள் கருத்துக்களை தெரிவிக்க மறக்காதீர்கள்.


வாரா வாரம் திங்கட்கிழமை பதிவர்கள் தாங்கள் கற்றுக் கொண்ட தொழில்நுட்ப செய்திகள், அல்லது எளிய ஆலோசனைகளை இந்த வலைத்தளம் மூலம் பகிர்ந்து கொள்ளலாம். விருப்பம் இருந்தால் தங்கள் மெயில் முகவரியை பின்னூட்டத்தில் அல்லது என் தொலைபேசிக்கு எஸ்.எம்.எஸ் செய்யுங்கள்.

13 comments:

Vidhoosh said...

vaalka. valarka.

வாரா வாரம் திங்கட்கிழமை பதிவர்கள் தாங்கள் கற்றுக் கொண்ட தொழில்நுட்ப செய்திகள், அல்லது எளிய ஆலோசனைகளை இந்த வலைத்தளம் மூலம் பகிர்ந்து கொள்ளலாம். விருப்பம் இருந்தால் தங்கள் மெயில் முகவரியை பின்னூட்டத்தில் அல்லது என் தொலைபேசிக்கு எஸ்.எம்.எஸ் செய்யுங்கள்.//

ஆனா, இதெல்லாம் நம்மால இயலாத காரியம். நிறையா படிச்சு தட்டச்சி... :( ஒரு பதிவே தாங்க முடியலை.
--வித்யா

குடந்தை அன்புமணி said...

//ஆனா, இதெல்லாம் நம்மால இயலாத காரியம். நிறையா படிச்சு தட்டச்சி... :( ஒரு பதிவே தாங்க முடியலை.
--வித்யா//

நீங்கள் கற்றுக் கொண்டதை உங்களோடு வைத்துக் கொள்ள வேண்டாமே... ஏதாவதொரு திங்கட்கிழமை உங்களுக்கு நேரம் கிடைக்காமலா போய்விடும். அப்போது வழங்கலாமே...

Vidhoosh said...
This comment has been removed by the author.
குடந்தை அன்புமணி said...

//Vidhoosh/விதூஷ் said...
நிச்சயம். ஆசைதான் பகிர. சரி அனுப்புங்களேன் ssrividhyaiyer@gmail.com//

மிக்க நன்றி தோழி...
தாங்கள் பகிர விரும்பும் செய்திகளை தயார் செய்து கொண்டு சொல்லுங்கள் என் வலையில் தங்களுக்கு அப்போது இடுகையிட அனுமதி வழங்குகிறேன். தங்கள் கணிணியிலிருந்தே இடுகையிடலாம். (அதாவது குழு முறையில்...)

Anonymous said...

இதில் காணப்படும் வலைபூக்கள் அனைத்தும் தொழில்நுட்ப வலைபூக்கள் இங்கு நான் சில தொழில்நுட்ப சில வலைபூக்கள் இணைத்துள்ளேன் இதில் உங்கள் வலைபூக்கள் இணைக்கவில்லை என்றால் இந்த இமெயில் முகவரிக்கு உங்கள் வலைப்பூ முகவரியை அனுப்பி வைக்கவும்

இமெயில் முகவரி: infokajan@ymail.com

வலைபூங்கா.காம்

நட்புடன் ஜமால் said...

நல்ல விடயம் நண்பரே.

நடத்துங்கோ கத்திக்கிடறோம் ...

ஆ.ஞானசேகரன் said...

நல்ல விடயங்கள் தொடருங்கள்

குடந்தை அன்புமணி said...

//நட்புடன் ஜமால் said...
நல்ல விடயம் நண்பரே.

நடத்துங்கோ கத்திக்கிடறோம் ...//

உங்களுக்குத் தெரிந்ததை நீங்களும் கற்றுக் கொடுக்க வேண்டும் ஜமால். வரும் திங்கள் முடியுமா? ஆம் எனில், உங்கள் மெயில் முகவரி தாருங்கள்.

குடந்தை அன்புமணி said...

//ஆ.ஞானசேகரன் said...
நல்ல விடயங்கள் தொடருங்கள்//

நீங்களும் உங்கள் ஆலோசனை, தொழில்நுட்பம் தகவல் தாருங்கள் ஞானசேகரன்.

முனைவர் இரா.குணசீலன் said...

பயனுள்ள குறிப்புகள் நண்பரே

குடந்தை அன்புமணி said...

//முனைவர்.இரா.குணசீலன் said...
பயனுள்ள குறிப்புகள் நண்பரே//

அதுதான் நான் வேண்டுவதும்.

முனைவர்.இரா.குணசீலன் said...

தங்களது குறிப்புகள் மிகவும் பயனுள்ளவையாகவுள்ளன. ஒரு ஐயம் நண்பரே.. தங்கள் இலக்கியா பதிவில் பச்சைநிறப் பெட்டிக்குள் கவிதைக்குரலுக்கு வாருங்கள் என்று டெக்ஸ் கீழிருந்து மேல் நோக்கிச் செல்கிறதே அதனை எவ்வாவு வலைப்பதிவுகளில் செயல் முறைப்படுத்துவது அது பற்றி ஒரு இடுகை எழுதுங்களேன் என்னைப் போல பலருக்கும் பயன்படும்.

குடந்தை அன்புமணி said...

//முனைவர்.இரா.குணசீலன் said...
தங்களது குறிப்புகள் மிகவும் பயனுள்ளவையாகவுள்ளன. ஒரு ஐயம் நண்பரே.. தங்கள் இலக்கியா பதிவில் பச்சைநிறப் பெட்டிக்குள் கவிதைக்குரலுக்கு வாருங்கள் என்று டெக்ஸ் கீழிருந்து மேல் நோக்கிச் செல்கிறதே அதனை எவ்வாவு வலைப்பதிவுகளில் செயல் முறைப்படுத்துவது அது பற்றி ஒரு இடுகை எழுதுங்களேன் என்னைப் போல பலருக்கும் பயன்படும்//

இந்த வழிமுறையை நான் தமிழ் வெப் என்னும் வலைத்தளத்திலிருந்து பெற்றுக் கொண்டேன். அதன் லிங்க்-
http://mytamilwep.blogspot.com/2009/04/post.2html.
இங்கு சென்று பெற்றுக் கொள்ளுங்கள்.

Post a Comment

உங்கள் கருத்துக்கள் எனக்கு ஊக்கமளிக்கும். மேம்படுத்தும். தயவு செய்து முகம் சுளிக்கத்தக்க பின்னூட்டங்களை தவிருங்கள்.